அமேசான்: ஐபோன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஐபோன் 7 பிளஸ் (128ஜிபி) மாடலின் முந்தைய விலை ரூ.72,060-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.65,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் வலைதளத்தில் தற்சமயம் ஆப்பிள் ஃபெஸ்ட் எனும் சிறப்பு விற்பனை மூலம் ஐபோன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 12-ம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி விலைகுறைப்பில் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆப்பிள் வாட்ச், மேக்புக், ஐபேட் போன்ற சாதனங்களுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி போன்றவை இதனுடன் இடம்பெற்றுள்ளது.

ஐபோன் எக்ஸ் :
ஐபோன் எக்ஸ் (64ஜிபி) மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.81,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு ஐபோன் எக்ஸ் (256ஜிபி) விலை ரூ.93,999-ஆக உள்ளது. ஐபோன் எக்ஸ் மாடலின் முந்தைய விலை 64ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி முறையே ரூ.95,390 மற்றும் ரூ.1,08,930-எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐபோன் 8:
ஐபோன் 8 (64ஜிபி) மாடலுக்கு ரூ.10,000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு
ஐபோன் 8 (256ஜிபி) மாடலுக்கு ரூ.4,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 7:
ஐபோன் 7 (32ஜிபி) மாடலின் முந்தைய விலை ரூ.52,370-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.41,999-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் 7 (128ஜிபி) மாடலின் முந்தைய விலை ரூ.61,560-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 7 பிளஸ்:
ஐபோன் 7 பிளஸ் (128ஜிபி) மாடலின் முந்தைய விலை ரூ.72,060-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.65,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் எஸ்இ மாடலின் முந்தைய விலை ரூ.26,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 6எஸ்:
ஐபோன் 6எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.42,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஐபோன் 6எஸ்பிளஸ் மாடலின் முந்தைய விலை ரூ.52,240-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.38,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேக்புக் ஏர்:
மேக்புக் ஏர் 13.3 இன்ச் மாடல் ரூ.19,570 வரை குறைக்கப்பட்டு ரூ.57,630க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும்
ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ மாடல்களுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








