Home
News

பியூச்சர் ஐபோன் இப்படி தான் இருக்குமா? 2 டிஸ்பிளேவுடன் iPhone Vision Pro ரெடியா?

ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துவிட்டது. எதிர்காலத்தில் ஐபோனின் (iPhone) வடிவமைப்பு முற்றிலுமாக மாறப்போகிறது. இப்போது இருக்கும் ஐபோன் டிசைன்கள் உங்களுக்கு போர் அடித்திருந்தால், வரவிருக்கும் புது ஐபோன் விஷன் ப்ரோ மாடல் உங்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் ஸ்மார்ட்போன்களுக்கு (Smartphone) உலகளவில் அதிக மவுசு இருக்கிறது. இதற்கு பாதுகாப்பு (Security), பிராண்டின் தரம் (Quality) என்று ஒரு சில காரணங்கள் மட்டுமே இருந்தாலும் கூட, ஆப்பிள் ஐபோனின் மோகம் மக்களைவிட்டு நகரப்போவதே இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. காரணம், கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது ஐபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பியூச்சர் ஐபோன் இப்படி தான் இருக்குமா? 2 டிஸ்பிளேவுடன் iPhone Vision!

ஆப்பிள் நிறுவனமும் அதன் வியாபாரத்தை உலக நாடுகளில் பறந்து விரித்து கொஞ்சம் கொஞ்சமாக பல மடங்கு பெருகி வருகிறது. இப்படி ஆப்பிள் நிறுவனம் தனது வியாபாரத்தில் பல புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோனின் வடிவமைப்பை மாற்றவுள்ளதாக தெரிகிறது. இதில் ஆப்பிளின் அடுத்த மாடலாக கருதப்படும் ஐபோன் விஷன் ப்ரோ மாடல் பற்றிய தகவல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

ஐபோன் விஷன் ப்ரோ (iPhone Vision Pro) என்று அழைக்கப்படும் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடலின் டிசைன் எப்படி இருக்குமென்ற புது தகவல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த வரவிருக்கும் புதிய ஐபோன் மாடலின் கான்செப்ட் புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, ஐபோன் விஷன் ப்ரோ என்ன டிஸ்பிளேவை பெரும், இதில் இரண்டாவது டிஸ்பிளே உள்ளதா?

இதில் கேமரா எப்படி இருக்கும் என்பது போன்ற விஷயங்களை இப்போது பார்க்கலாம். அன்டடர் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த ஐபோன் விஷன் ப்ரோ வாட்டர்ஃபால் டிஸ்பிளேவுடன் வரும். அதுமட்டுமின்றி, இந்த புதிய கான்செப்ட் ஐபோன் மாடல் அதன் கேமரா மாட்யூல் அருகில் மற்றொரு சிறிய டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும் என்பதை புகைப்படம் காண்பிக்கிறது.

பியூச்சர் ஐபோன் இப்படி தான் இருக்குமா? 2 டிஸ்பிளேவுடன் iPhone Vision!

ஆம், வரவிருப்பதாக கூறப்படும் ஐபோன் விஷன் ப்ரோ மாடல் போனில் இரண்டு டிஸ்பிளே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குட்டி டிஸ்பிளே போனின் பேக் பேனல் டிஸ்பிளேவாக செயல்படும். இது டைம் மற்றும் போனிற்கு வரும் நோட்டிபிகேஷன் விபரங்களையும், காலர் தகவல்களையும் காண்பிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய டிசைன் ஐபோன் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அல்லது எதிர்காலத்தில் வரவிருக்கும் ஐபோன் சாதனம், இப்போது இருக்கும் எந்த மாதிரியான மாடலில் அறிமுகமானால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone Vision Pro Concept Image Leaked Online Check The New iPhone Look With 2 Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X