iPhone-களுக்கான Lockdown-ஐ அறிவித்த Apple; அட இது எப்போ?

|

ஐபோன்களுக்கான லாக்டவுன் என்றதுமே, ஆப்பிள் ஐபோன் மாடல்களில் எதோ "பாதுகாப்பு குறைபாடு" வந்துவிட்டது என்று நினைத்து 'டென்ஷன்' ஆகி விடாதீர்கள்

லாக்டவுன் (Lockdown) என்பது ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ள ஒரு புதிய மோட் (Mode) ஆகும்.

ஆப்பிளின் இந்த லாக்டவுன் மோட்-ஆல் (Lockdown Mode) என்ன பயன்? இந்த மோட் எந்தெந்த ஆப்பிள் டிவைஸ்களில் அணுக கிடைக்கும்? எந்தெந்த ஐபோன் மாடல்களில் அணுக கிடைக்காது? அடிப்படையில் இது எப்படி வேலை செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இது ஐபோனுக்கு மட்டுமானது அல்ல!

இது ஐபோனுக்கு மட்டுமானது அல்ல!

அதிநவீன ஸ்பைவேர்களிடம் (Spywares) இருந்து யூசர் டேட்டாவை பாதுகாக்கும் நோக்கத்தின் கீழ், ஆப்பிள் நிறுவனம் அதன் iPhone, iPad மற்றும் Mac-களுக்கான 'லாக்டவுன் மோட்' என்கிற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.

யூஸர் ப்ரைவஸியை அடிப்படையாக கொண்ட இந்த புதிய அம்சமானது iOS 16, iPadOS 16 மற்றும் macOS Ventura ஆகியவற்றில், இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளிவரும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது

Extreme பாதுகாப்பு.. ஆனாலும் Optional தான்!

Extreme பாதுகாப்பு.. ஆனாலும் Optional தான்!

ஆப்பிள் நிறுவனத்தின் கூறுப்படி, தத்தம் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு "கடுமையான" அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மிக குறைந்த எண்ணிக்கையிலான யூசர்களுக்கு, இந்த லாக்டவுன் மோட் ஆனது "தீவிரமான, அதே சமயம் விருப்பப்பட்டு தேர்வு செய்யும் ஒரு பாதுகாப்பாக இருக்கும்".

பாதுகாப்பு என்றால்? என்ன மாதிரியான பாதுகாப்பு?

பாதுகாப்பு என்றால்? என்ன மாதிரியான பாதுகாப்பு?

மிகவும் எளிமையாக கூற வேண்டுமென்றால், இந்த லாக்டவுன் மோட் ஆனது பெகசஸ் (Pegasus) மற்றும் "அரசாங்கங்களின்" ஸ்பைவேர்களிடம் இருந்து உங்களை பாதுகாக்கும்.

சற்றே விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த லாக்டவுன் மோட் ஆனது ஒரு யூசரின் டிவைஸ் பிஸிக்கல் ஆக அல்லது டிஜிட்டல் ஆக ஹேக் செய்யப்படும் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கும்.

100 மணிநேரம் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் 30 கிராம் எடையுள்ள நெக்பேண்ட் இயர்போன்ஸ்!100 மணிநேரம் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் 30 கிராம் எடையுள்ள நெக்பேண்ட் இயர்போன்ஸ்!

சிக்கல் எந்த வழியில் வந்தாலும் உள்ளே விடாது!

சிக்கல் எந்த வழியில் வந்தாலும் உள்ளே விடாது!

ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் ஆப்பிள் மேக்களில் உள்ள லாக்டவுன் மோட் ஆனது டிவைஸின் பாதுகாப்பை கடினப்படுத்தும் மற்றும் (ஹேக், ஸ்பைவேர்) போன்ற தீங்கிழைக்கும் செயல்பாடுகளை கடுமையாக கட்டுப்படுத்தும்.

முக்கியமாக மெசேஜ்கள், இன்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும், ஃபேஸ்டைம், கால்ஸ் போன்ற ஆப்பிள் சேவைகளுக்கான அத்துமீறிய அணுகல்களை தடுக்கும். மேலும் கம்ப்யூட்டர் அல்லது ஆக்சஸெரீ வழியிலான வயர்டு கனெக்ஷனுக்கு கூட வழி விடாது!

இது ஒன்றும் புதிதல்ல!

இது ஒன்றும் புதிதல்ல!

கடந்த காலங்களில், பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் கூட தத்தம் யூசர்களின் பெர்சனல் டேட்டாவை பாதுகாக்கும் நோக்கத்தின் கீழ் இதேபோன்ற அணுகுமுறைகளில் வேலை செய்துள்ளன.

எடுத்துக்காட்டாக, ஃபிஷிங், தற்செயலான ஷேரிங் மற்றும் திருட்டுத்தனமான அக்சஸ் போன்றவைகளை தடுக்க கூகுள் நிறுவனம் அதன் Advanced Protection-ஐ கடந்த 2017 இல் அறிமுகப்படுத்தியது.

இதே போல தன் யூசர்களுக்கு பாதுகாப்பான ப்ரவுஸரிங் அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதன் எட்ஜ் ப்ரவுஸரில் Super Duper Secure Mode-இல் பணியாற்ற தொடங்கி உள்ளது.

ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!

இருந்தாலும் ஆப்பிளின் லாக்டவுன் மோட் தான் பெஸ்ட்டு! ஏன்?

இருந்தாலும் ஆப்பிளின் லாக்டவுன் மோட் தான் பெஸ்ட்டு! ஏன்?

ஏனெனில், ஆப்பிளின் இந்த சமீபத்திய வளர்ச்சி (அதாவது லாக்டவுன் மோட்) அனைத்து யூசர்களுக்கும் அணுக கிடைக்கும். மேலும் இது போன்கள் மற்றும் லேப்டாப்களில் உள்ள பல முக்கிய அம்சங்களை பிளாக் செய்வதன் வழியாக பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஆனாலும் இந்த 'லாக்டவுன் மோட்' சரியாக எப்படி வேலை செய்யும் என்பது தொடர்பான கூடுதல் விவரங்களை ஆப்பிள் இன்னும் வெளியிடவில்லை.

எந்தெந்த ஐபோன்களில் இந்த மோட் அணுக கிடைக்காது?

எந்தெந்த ஐபோன்களில் இந்த மோட் அணுக கிடைக்காது?

ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் ப்ரைவஸி-சென்ட்ரிக் அம்சமானது ஐபோன் 7, ஐபோன் 6S போன்ற "பழைய ஜெனரேஷன்" ஆப்பிள் ஐபோன்களுக்கு வராது.

ஆனாலும், செக்கெண்ட் ஜெனரேஷன் iPhone SE மாடல் ஆனது சாஃப்ட்வேர் அப்டேட் வழியாக புதிய லாக்டவுன் மோட்-ஐ பெறும்.

வந்துகொண்டே இருக்கும் தொல்லைகள்!

வந்துகொண்டே இருக்கும் தொல்லைகள்!

ஹெர்மிட் (Hermit) என அழைக்கப்படும் புதிய ஸ்பைவேர் "உயர் அதிகாரிகளை" குறிவைப்பதாக தகவல் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு, ஆப்பிள் அதன் லாக்டவுன் மோட்-ஐ அறிவித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2021 ஆம் ஆண்டில், NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஸீரோ-கிளிக் ட்ரோஜன் வைரஸ் ஆன பெகசஸ் ஸ்பைவேரும் கூட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

இப்படியான "தொல்லைகளுக்கு" மத்தியில் ஆப்பிளின் லாக்டவுன் மோட் ஆனது சற்றே கூடுதல் பாதுகாப்பை வழங்கினாலும் கூட அது பாராட்டுக்கு உரியது தான்!

Photo Courtesy: Apple

Best Mobiles in India

English summary
iPhone Users to get Lockdown Mode via upcoming iOS 16 Update Apple Says It gives Extreme Protection From Spyware

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X