Home
News

ஐயையோ.! iPhone பயனர்களுக்கு போலீஸ் கொடுத்த எச்சரிக்கை.. உடனே உங்க செட்டிங்கை மாத்துங்க.. இல்லாட்டி சிக்கல்..

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு (Apple iPhone Users) ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை காவல்துறை (Police) அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். புதிய ஐஓஎஸ் 17 (iOS 17) அப்டேட் உடன் ஐபோனை அப்டேட் செய்த அனைவர்க்கும் இந்த வார்னிங் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் ஐஓஎஸ் 17 (iOS 17) அப்டேட் உடன் தொடர்புகளைப் பகிர புதிய வழியை அறிமுகப்படுத்தியது. இது 'நேம் டிராப்' (Name drop) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய அம்சம் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) பயனர்கள், தங்கள் காண்டாக்ட் விபரங்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. அதிலும் குறிப்பாக, இரண்டு சாதனங்களையும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக வைக்கும் போது இந்த மாற்றம் நடைபெறுகிறது.

ஐயையோ.! iPhone பயனர்களுக்கு போலீஸ் கொடுத்த எச்சரிக்கை..

இந்த அம்சத்தைப் பற்றி, ஐபோன் பயனர்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு புதிய எச்சரிக்கை செய்தி தற்போது காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. iOS 17 இன் நேம்டிராப் (NameDrop) அம்சம் மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாக இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு சாதனத்தில் இருக்கும் காண்டாக்ட் விபரங்களை மற்ற சாதனத்துடன் சில நொடியில் பகிர்ந்து கொள்ள ஏர்டிராப்பைப் (AirDrop) அம்சத்தை பயன்படுத்துகிறது.

ஐபோன் நேம்டிராப் அம்சம் (iPhone Namedrop feature):

இந்த புதிய நேம்டிராப் அம்சத்தை பயன்படுத்த, நீங்கள் 2 ஐபோன் சாதனங்களை அருகில் கொண்டு வர வேண்டும். பிறகு இரண்டு போன்களின் மேல் பகுதியும் ஒன்றையொன்று தொட அனுமதிக்க வேண்டும். இது இரண்டு ஐபோன்களுக்கு இடையில், அல்லது ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் இடையே கூட நடத்தப்படலாம். இரண்டு சாதனங்களும் பயனர்களால் அங்கீகரிக்கப்ட்ட பிறகு, சில நிமிடங்களில் காண்டாக்ட் (contact) விபரங்கள் மாற்றப்படும்.

உடனே செட்டிங்ஸ் சென்று OFF செய்யுங்கள் - போலீஸ்:

இந்த அம்சம் இப்போது அப்டேட் செய்யப்பட்டுள்ள அணைத்து ஐபோன் மாடல்களிலும் இயல்பாகவே ஆனில் (ON) உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது ஒரு வழியில் பாதுகாப்பு சிக்கலை உருவாக்கியுள்ளது. சில நேரங்களில் இது பயனரின் சரியான அனுமதி இல்லாமல் காண்டாக்ட் விபரங்களை மற்ற சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஐபோன் பயனர்கள் உடனே இந்த விருப்பத்தை ஆஃப் (OFF) செய்யும்படி காவல்துறை எச்சரித்துள்ளது.

நேம்டிராப் அம்சம் தேவைப்படும் போது அதை செட்டிங்ஸ் சென்று இயக்கிய பிறகு, பயனர்கள் பயன்படுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள செஸ்டர் காவல் துறையினர், தங்கள் பேஸ்புக் பக்கம் வழியாக, ஐபோன் பயனர்களுக்கு நேம்டிராப் அம்சத்தை (iPhone namedrop feature) அணைக்கச் சொல்லியும், அதை எப்படிச் செய்வது என்ற வழிகாட்டுத்தலையும் பதிவிட்டுள்ளனர்.

எப்படி iOS 17 இன் நேம்டிராப் அம்சத்தை ஆஃப் செய்வது (How to off namedrop feature in iOS 17)?

காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் படி, எப்படி உங்கள் ஐபோனில் ஆட்டோமேட்டிக் ஆக இயக்கப்பட்டுள்ள நேம்டிராப் அம்சத்தை ஆஃப் செய்வது என்று இப்போது பார்க்கலாம். உங்கள் ஐபோனின் செட்டிங்ஸ் மெனு சென்று, ஜெனெரல் கிளிக் செய்து, அதன் கீழ் காணப்படும் ஏர்டிராப் அம்சத்தை கிளிக் செய்து, பிரிங்கிங் டிவைஸ் டூகெதர் என்ற விருப்பத்தை கிளிக் செய்து, பக்கவாட்டில் காண்பிக்கப்படும் டாக்கில் பட்டனை கிளிக் செய்யவும்.

Settings > General > AirDrop > Bringing Devices Together > Toggle off இப்படி செய்தால் உங்கள் ஐபோனில் இயக்கப்பட்டுள்ள நேம்டிராப் அம்சம் ஆஃப் செய்யப்படும். இதை உடனே செய்யுங்கள் என்று காவல்துறையால் பாதுகாப்பு நலன் கருதி எச்சரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone Users Should Immediately Turn Off This iOS 17 Namedrop Feature in Apple Settings Says Police Department
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X