இனி வாட்ஸ்அப் பயனர்களுக்கு கவலை இருக்காது: 2ஜிபி வரை ஃபைல்களை அனுப்பலாம்.! விரைவில்!
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம். பின்பு இதில் முக்கியமான டாக்குமெண்ட்ஸ், போட்டோவையும், ஃபைல்களையும் எளிமையாக அனுப்ப முடியும்.

இருந்தபோதிலும் ஒரு ஃபைல் குறிப்பிட்ட அளவுக்குள் (size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். பின்பு இதன் காரணமாக வேறு சிலஅப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்புவதுண்டு.

மேலும் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரை அளவுள்ள ஃபைல்களை பயனர்கள் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம்
செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதற்கான சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த வசதி முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது. அதன்பின்பு
தான் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தகக்கது.

அதேபோல் வாட்ஸ்அப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெசேஜ் ரிப்ளை அம்சத்தை கொண்டு வருகிறது. தேர்ந்தெடுக்குப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கிறது. டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் முன்னதாகவே இந்த செயல்பாட்டை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் குறித்த தகவல் சமீப காலமாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த அம்சத்தை பீட்டா பயனர்களால் முயற்சிக்க முடியும். டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல பயன்பாடுகள் முன்னதாகவே இந்த செயல்பாட்டை தொடங்குகின்றன. வாட்ஸ்அப் அனிமேஷன் செய்யப்பட்ட இமோஜிகலை வழங்கவில்லை என்றாலும் பயனர்கள் குறைந்தபட்சம் வழக்கமான இமோஜிகளுடன் சில மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்ய முடியும்.

வாட்ஸ்அப் செய்திகளுக்கு ரிப்ளை செய்ய பயனர்கள் எந்த மெசேஜையும் கிளிக் செய்யலாம். இனி ஆப்ஸ் ஒரு இமோஜி பெட்டியைக் காண்பிக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து தேர்வு செய்யலாம். நீங்கள் கிளிக் செய்யும் இமோஜி ரிப்ளையாக அனுப்பப்படும். தற்போது இமோஜி பாக்ஸ்-ஐ கிளிக் செய்யும் போது பயனர்கள் லைக், லவ், ஸ்மைல், ஆச்சரியம், சோகம் மற்றும் நன்றி உள்ளிட்ட ஆறு இமோஜிகளை மட்டுமே பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற அம்சத்தை டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளமும் வழங்குகிறது. டெலிகிராம் 10-க்கும் மேற்பட்ட இமோஜிகளை மட்டுமே வழங்குகிறது. அதேபோல் இன்ஸ்டாகிராம் குறிப்பிட்ட அம்சத்தை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு வரம்பற்ற இமோஜிகளை வழங்குகிறது.பெறப்படும் மெசேஜை அழுத்திப் பிடித்து காட்டப்படும் இமோஜியை செலக்ட் செய்து ரிப்ளை செய்யலாம். இதன்மூலம் பதில் சொல்லாமல் இமோஜி மூலம் ரிப்ளை செய்யலாம். இந்த அம்சம் டெஸ்க்டாப் வாட்ஸ்அப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் கிடைக்கிறது. இந்த அம்சம் வரும் மாதங்களில் நிலையான வெளியீட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அம்சம் குழு மற்றும் தனிப்பட்ட அரட்டைகள் இரண்டிற்கும் வழங்கப்படுகிறதா அல்லது தனிநபர் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களாக நீங்கள் இருந்தால் வாட்ஸ்அப்பின் 2.22.8.3 பதிப்பின் மூலம் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications