இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. iPhone SE Plus விலை மற்றும் சிறப்பம்சம் பற்றிய சுவாரசிய தகவல்..

|

ஆப்பிள் நிறுவனம் iPhone SE 2020 என்ற மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது, இதற்கு உலகளவில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. குறைந்த விலையில் ஆப்பிளின் டாப் நாட்ச் அம்சத்தை அனுபவிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை இந்த iPhone SE சாதனம் ஏற்படுத்தியது என்பதே உண்மை. இப்படி நல்ல வரவேற்பைப் பெற்ற iPhone SE 2020 மாடலின் அடுத்த தலைமுறை மாடலாக iPhone SE Plus சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.

புதிய iPhone SE Plus

புதிய iPhone SE Plus

குறைந்த விலையில் ஒரு சிறப்பான ஐபோன் சாதனத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எதிர்பார்ப்பை இந்த புதிய iPhone SE Plus சாதனம் நிறைவேற்றும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட iPhone SE 2020 மாடலை விட சில சுவாரசியமான சிறப்பம்சங்களைக் குறைந்த விலையில் ஆப்பிள் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று நிறுவனம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

டிப்ஸ்டர் வெளியிட்ட சுவாரசிய தகவல்

டிப்ஸ்டர் வெளியிட்ட சுவாரசிய தகவல்

இப்படி இருக்கையில், @aaple_lab என்ற இந்த புதிய ஐபோன் எஸ்.இ பிளஸ் சாதனம் பற்றிய முக்கிய சிறப்பம்ச விபரக்குறிப்பு பற்றிய தகவலை தற்பொழுது இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, இத்துடன் இந்த புதிய iPhone SE Plus சாதனம் என்ன விலைப் பட்டியலின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்பதையும் இவர் தற்பொழுது லீக் செய்துள்ளார். நிச்சயமாக புதிய iPhone SE Plus இன் விலை உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!

முக்கிய சிறப்பம்சங்கள் இது தான்

முக்கிய சிறப்பம்சங்கள் இது தான்

புதிய iPhone SE Plus 6.1' இன்ச் IPS டிஸ்பிளேயுடன் ஆப்பிள் A13 பயோனிக் சிப்செட் அல்லது ஆப்பிள் A14 பயோனிக் சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்த வரையில் இது 12 மெகா பிக்சல் iSight சென்சார் கொண்ட பின்புற கேமரா மற்றும் 7 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவுடன் வெளிவரும்.

iPhone SE பிளஸ் போனில் இது மாற்றம்

iPhone SE பிளஸ் போனில் இது மாற்றம்

இது IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் பிளாக், ரெட் மற்றும் வைட் நிறுப்பதில் வெளியாகும்.இதைவிட முக்கியமான சிறப்பம்சமாக, கடந்த iPhone SE 2020 போனில் இருப்பது போல் இல்லாமல் இந்த புதிய iPhone SE Plus சாதனம் ஹோம் பட்டனில் உள்ள டச் ஐடி-யை (Touch ID) நிராகரித்து பேஸ் ஐடி-யை அனுமதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை.. இவ்வளவு தானா!

எதிர்பார்க்கப்படும் விலை.. இவ்வளவு தானா!

இதற்குப் பதிலாக ஆப்பிள் ஐபாட் ஏர் இல் இருப்பது போல் பவர் பட்டனுடன் டச் ஐடியை வழங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ. 36,300 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த புதியiPhone SE Plus அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே இந்த செய்தி ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone SE Plus key specifications and pricing were leaked by a tipster on the internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X