ஐபோன் SE : இதுவரை கசிந்திருக்கும் தகவல்கள்.!!

Written By:

நாளை ( மார்ச் 21 ) நடைபெற இருக்கும் ஆப்பிள் விழாவில் ஆப்பிள் நிறுவனம் 4 இன்ச் அளவில் ஐபோன் SE கருவியை வெளியிட இருக்கின்றது என ஒட்டுமொத்த தொழில்நுட்ப ப்ரியர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா, நிறைவேறாமல் போகுமா என்பதை அறிந்து கொள்ள நாளை வரை காத்திருப்பதை தவிற வேறு வழி கிடையாது.

இந்த சூழலில் நாளை வெளியாகலாம் என கூறப்படும் ஐபோன் SE கருவியில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என இதுவரை கிடைத்திருக்கும் முக்கிய அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் SE

ஐபோன் SE

ஐபோன் SE கருவியில் 4.7 இன்ச் திரை வழங்கப்பட்டாலும் இதன் திறன் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. இந்த கருவியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ9 பிராசஸர் மற்றும் எம்9 மோஷன் கோ-பிராசஸர் வழங்கப்படலாம் என முன்பு வெளியான தகவல்களில் குறிப்படப்பட்டிருந்தது

கேஜிஐ செக்யூரிட்டீஸ்

கேஜிஐ செக்யூரிட்டீஸ்

பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி-க்யோ ஐபோன் SE கருவியின் விலை இந்திய மதிப்பில் ரூ.26,553 முதல் ரூ.33,191க்குள் இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

கேமரா

கேமரா

மேலும் 12 எம்பி ப்ரைமரி கேமரா, ஆப்பிள் பே வசதி மற்றும் ஏ9 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

3டி டச்

3டி டச்

ஐபோன் SE கருவியில் 3டி டச் அம்சம் நீக்கப்படலாம் என சமீபத்தில் ரகசியமாய் கசிந்த புகைப்படங்கள் பார்க்க முடிந்தது. இந்த அம்சமானது பெரிய மாடல் கருவிகளில் மட்டும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படிகின்றது.

வீடியோ

வீடியோ

மேலும் ஐபோன் SE கருவியில் 4K வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஐபோன் SE வடிவமைப்பு ஐபோன் 5எஸ் மற்ரும் ஐபோன் 6எஸ் கருவிகளை சார்ந்து இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone SE And Everything you should Know About It Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot