வந்துட்டான் வந்துட்டான்.. ஆப்பிள் அறிமுகம் செய்யும் ஒற்றை கண் iPhone.. பட்ஜெட்ல என்ன மாடல்? என்ன அம்சம்?
யாரும் எதிர்பார்த்திடாத அம்சத்துடன் ஒரு புதிய ஐபோன் (iPhone) சாதனம் விரைவில் அறிமுகமாகவிருக்கிறது. இது பட்ஜெட் விலையில் (budget price) அனைவராலும் வாங்கும் விலையில் வெளிவரப்போகும் புதிய ஐபோன் SE 4 (iPhone SE 4) ஸ்மார்ட்போன் என்று வதந்திகள் தெரிவிக்கிறது.
ஆப்பிள் (Apple): ரசிகர்களை குஷி அடைய செய்யும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் ஆப்பிள் நிறுவனம் அதன் பட்ஜெட் செக்மென்ட் ஐபோன் சாதனத்தை iPhone SE 4 என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஐபோன் SE (iPhone SE) சாதனம் நம்ப முடியாத மிரட்டல் அம்சங்களை பேக் செய்து வெளிவர இருப்பதாக லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதை பற்றி விரிவாக பார்க்கலாம். சமீபத்தில் வெளியான தகவலின் படி, வரவிருக்கும் புதிய ஐபோன் SE 4 (iPhone SE 4) சாதனம் டைனமிக் ஐலேண்ட் அம்சத்துடன் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இது ஆப்பிளின் அடுத்த தலைமுறை சாதனமான ஐபோன் 16 வடிவமைப்பை தழுவி வெளிவரும் என்றும் லீக் தகவல்கள் சில சுவாரசியமான தகவல்களை கட்டவிழ்த்துள்ளன.
டைனமிக் ஐலேண்ட் அம்சம்: ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சமாகும். இந்த அம்சம் புதிய ஐபோன் மாடல் மற்றும் பழைய ஐபோன் மாடல்களை பிரித்துப்பார்க்கவும் அனுமதிக்கிறது. தற்போது விற்பனை செய்யபப்படும் 8 ஐபோன் மாடல்களில் உள்ள புதிய மாடல்களில் மட்டும் இந்த டைனமிக் ஐலேண்ட் அம்சம் காணப்படுகிறது. ஐபோன் வரிசையில் மிகவும் குறைந்த விலை போனாக ஆப்பிள் ஐபோன் SE மாடல் திகழ்கிறது.
குறைந்த விலை ஐபோனில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் இடம்பெறப் போகிறது என்று வெளியாகியுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய லீக் தகவல் @upintheozone மற்றும் @MajinBuOfficial மூலம் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள தகவல் படி, இது ஐபோன் 16 கேமரா பில் (iphone 16 camera pill) வடிவமைப்பை பெரும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.

iPhone 16: இருப்பினும், இதன் அளவு ஏறக்குறை ஐபோனின் முந்தைய மாடலான ஐபோன் XR அளவில் இருக்குமென்று கூறப்படுகிறது. டைனமிக் ஐலேண்ட் மற்றும் கேமரா அமைப்பு ஐபோன் 16 போல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஐபோன் 16 இல் இருக்கும் இரண்டு கேமரா போல் இல்லாமல், ஒற்றை கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒற்றை கேமரா அமைப்பை பார்ப்பதற்கு வரவிருக்கும் புதிய ஐபோன் SE 4 சாதனத்தை ஒற்றை கண்ணுடன் காட்சியளிப்பது போல் தெரிகிறது. இணையத்தில் லீக் ஆகியுள்ள இந்த புதிய ஐபோன் SE சாதனத்தின் புகைப்படங்கள் நமது ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த புதிய ஐபோன் SE 4 (iPhone SE 4) அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.
இந்த புதிய ஐபோன் SE 4 (iPhone SE 4): சாதனம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த 2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இது ஐபோன் 16 தொடருடன் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. அல்லது ஐபோன் SE 4 (iPhone SE 4) சாதனம் மட்டும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாக வாய்ப்புளள்து என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications