இந்தமுறை Apple உங்களை ஏமாற்றாது.. புது iPhone SE 4 அறிமுக தேதி இதனா? இந்த போனில் என்னலாம் புதுசா இருக்கு?
ஆப்பிள் ரசிகர்களுக்கு ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series) பெரியளவு ஏமாற்றத்தை கொடுத்ததாக கருதப்படுகிறது. பெரியளவில் எந்தவித மாறுதலும் இல்லாமல், வெறும் சாப்ட்வேர், ஹார்ட்வேர், நிறங்களின் மாற்றங்களை மட்டும் வைத்து ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 series) போன்களை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் என்று பெயர்மாற்றம் செய்து அறிமுகம் செய்துள்ளதாக கேளிக்கைக்கு ஆளானது. இதுவொரு புறம் இருக்க, பட்ஜெட் செக்மென்ட் ஆப்பிள் பிரியர்கள் இப்போது ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) வருகைக்காக நம்பிக்கையுடன் சாதனத்திற்காக காத்திருக்கின்றனர். இதன் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் வரிசையில், பட்ஜெட் பிரெண்ட்லி ஐபோன் (budget-friendly iPhone) சாதனமாக மக்கள் விரும்பி வாங்கும் சீரிஸ் தான் ஐபோன் எஸ்இ (iPhone SE) சீரிஸ் போன்கள். இந்த ஆண்டிற்கான புதிய ஐபோன் எஸ்இ மாடல் சாதனமாக ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த போனில் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அறிமுகம் தேதியும் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இந்தமுறை Apple உங்களை ஏமாற்றாது.. புது iPhone SE 4 அறிமுக தேதி இதனா?
சமீபத்தில் வெளியான தகவலின் படி, விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) சாதனம் வரும் மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்னும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், டிப்ஸ்டர் தகவல்கள் மார்ச் 2025 இல் நாம் கண்டிப்பாக ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) போனை சந்தையில் பார்க்கலாம் என்று பறித்துரைக்கின்றன.
இத்துடன், iPhone SE 4 ஸ்மார்ட்போன் சாதனம் என்ன என்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. iPhone SE 4 சாதனம் 48 மெகா பிக்சல் சிங்கிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.06" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒற்றை கண் போன்ற வடிவத்தில் சிங்கிள் ரியர் கேமராவுடன் iPhone SE 4 போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் எஸ்இ 4 போனில் ஒற்றை கண் கேமராவா? (iPhone SE 4 Single Rear Camera):
இன்னும் சிலர், இது ஐபோன் 16 இல் காணப்படும் வெர்டிகள் டூயல் ரியர் கேமரா போன்ற அமைப்பை பெறலாம் என்றும் கூறியுள்ளனர். ஐபோனில் 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் OLED டிஸ்பிளே இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், நாம் LED டிஸ்பிளேவுடன் நமது எதிர்பார்ப்பை நிலைநிறுத்திக்கொள்வது அதிக ஏமாற்றத்தை வழங்காது என்று கூறிக்கொள்கிறோம்.
iPhone SE 4 மொபைல் சாதனம் A18 பயோனிக் சிப்செட் உடன் 6GB ரேம் அல்லது 8GB LPDDR5 ரேம் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அலுமினியம் சைட் ஃபிரேம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சிக்னேச்சர் பட்டன் மாடலான ஹோம் பட்டனை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது டச் ஐடி (Touch ID) மற்றும் பேஸ் அன்லாக் ஐடி (Face ID) யுடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய iPhone SE 4 சாதனம் USB-C போர்ட் உடன் வெளிவரும். இந்த போனின் விலை பற்றி பேசுகையில், இது $499 டாலர் விலையுடன் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 41,000 இருக்குமென்று கூறப்படுகிறது. இது வரும் மார்ச் 2025 இல் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் அல்லது அதற்கு முன்பாகவும் சந்தைக்குள் நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








