Home
News

இந்த iPhone-னுக்காக 2 வருட தவம்..ஆப்பிள் ரசிகர்களின் காத்திருப்புக்கு விடை கிடைத்தது.. iPhone SE 4 விலை என்ன?

ஆப்பிள் (Apple) நிறுவனம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக இந்த ஐபோனின் அறிமுகத்தை மெல்ல-மெல்ல தள்ளிவைத்து வருகிறது. அது தான் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) ஸ்மார்ட்போனின் வருகை. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. முதல் காரணம், ஆப்பிள் நிறுவனம் இந்த போனை மிட்-பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது, மிகமிக குறைந்த விலை ஐபோன் மாடலாக இது வெளிவர போகிறது. இரண்டாவது காரணம், இதில் ஏராளமான அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் புகுத்தியுள்ளது. இந்த போன் வருகையினால் மற்ற ஐபோன்களின் விற்பனை குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஐபோன் மாடலான ஐபோன் SE 4 சாதனம் (iPhone SE 4) பல முக்கியமான மற்றும் புதுமையை ஆப்பிளின் அம்சங்களை பேக் செய்யுமென்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்பு அதன் SE மாடலை கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் அறிமுகம் செய்தது, இதை நிறுவனம் ஐபோன் SE 3 (iPhone SE 3) என்ற பெயரில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த iPhone-னுக்காக 2 வருட தவம்..காத்திருப்புக்கு விடை.. iPhone SE 4..

இப்போது, 2 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு, ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஐபோன் SE (iPhone SE) மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் வரும் மார்ச் 2025 ஆம் ஆண்டில் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யுமென்று வதந்திகள் இப்போது பரவி வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் சீன ஸ்மார்ட்போன் (Chinese smartphone manufacturers =) நிறுவனங்கள் மலிவு விலை மற்றும் பட்ஜெட் செக்மென்ட்களில் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து, ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனை தொடர்ந்து சாம்சங் (Samsung) போன்ற மற்ற OEMs நிறுவனங்களும் கூட மலிவு விலை மற்றும் பட்ஜெட் செக்மென்ட், பிரீமியம் பிளாக்ஷிப் என்று எல்லா பக்கமும் விற்பனையில் முன்னேறி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் எல்லாம் குறைந்த விலையில் அதிக சாதனங்களை விற்பனை செய்து வருகின்றன. இதில் எப்போதும் விலையை பற்றி கவலையே இல்லாமல், தொடர்ந்து அதிக விலையுடன் தனது விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனமாக ஆப்பிள் மட்டுமே திகழ்கிறது. இருப்பினும், இப்போது மிட் பட்ஜெட் செக்மென்ட்டிற்குள் கால் பதித்து, குறைந்த விலையில் பெஸ்டான ஐபோனை வழங்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக வரவிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) சாதனத்தில் நிறுவனம் 6.06" இன்ச் அளவு கொண்ட OLED டிஸ்பிளேவை (Dispaly) வழங்குமென்று கூறப்படுகிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் அதன் சொந்த 5ஜி மோடம் (5G Modem) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. இது ஆப்பிள் பேஸ் ஐடி (Apple Face ID) உடன் ஐபோன் 14 இன் சேசிஸை பெரும் என்று கூறப்படுகிறது.

இது ஆப்பிள் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை வழங்கும் செய்தியாக அமைந்துள்ளது. இதில் மிகவும் சுவாரசியமான தகவலாக iPhone SE 4 சாதனத்தில் ஆப்பிள் நிறுவனம் அதன் சொந்த ஏஐ (AI) அம்சமான ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Apple Intelligence) ஆதரவையும் வழங்குமென்று கூறப்படுகிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 50,000 விலைக்குள் இருக்குமென்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone SE 4 Expected Launch in 2025 Apple Strategy in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X