iPhone SE 4 போனை டார்கெட் செய்யும் ஆப்பிள் ரசிகர்கள்.. iPhone 14, iPhone 15லாம் வேண்டாம்.. எஸ்இ 4 தான் வேணும்!
உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அடுத்த புது ஐபோன் மாடலாக ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) கருதப்படுகிறது. இந்த போனின் அறிமுகத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், ஆப்பிளின் புதிய லீக் தகவல் ஒரு சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
மேக்ரூமர்ஸ் (MacRumors) இன் புதிய லீக் தகவலின் படி, வரும் 2025 ஆம் ஆண்டில் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) சாதனம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) டிவைஸ், பேஸ் ஐடி (Face ID) அம்சத்துடன், யுஎஸ்பி டைப்-சி (USB-C) சார்ஜிங் போர்ட்டுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆப்பிள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், வரவிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ 4 சாதனம் ஐபோன் 14 (iPhone 14) ஐப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று புதிய லீக் தகவல் பரிந்துரைத்துள்ளது. அதேபோல், இன்னும் சில கூடுதல் தகவல்களும் இப்போது லீக் செய்யப்பட்டுள்ளது. அது என்னது என்று பார்க்கலாம்.
ஐபோன் 14 (iPhone 14) போன்ற டிஸ்பிளேவுடன் வருகிறதா புது ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4):
ஐபோன் 14 சேஸ்ஸின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பில் புதிய ஐபோன் எஸ்இ 4 மாடலை ஆப்பிள் உருவாக்கி வருவதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகிறது. புதிய ஐபோன் எஸ்இ (iPhone SE) 4 மாடல் ஆனது 6.1' இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இது ஃபேஸ் ஐடிக்கு பயன்படுத்தப்படும் ட்ருடெப்த் (TrueDepth) கேமரா அமைப்புக்கான நாட்ச் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) ஆனது 165 கிராம் எடையுள்ளதாக வதந்தி பரவியுள்ளது. இது iPhone 14 ஐ விட 6 கிராம் குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு தெளிவான புரிதலை வழங்க இரண்டு மாடல்களின் எடையை ஒப்பிட்டு காண்பித்துள்ளோம். ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) மாடலின் பரிமாணங்கள் மற்றும் எடைகள் கீழே குறிப்பிட்டுளோம்.
ஐபோன் 14 சாதனத்தின் பரிமாணம் 146.7 மிமீ x 71.5 மிமீ x 7.80 மிமீ ஆக இருக்கிறது. இதன் எடை 172 கிராம் ஆகும். அதேபோல், ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) சாதனத்தின் பரிமாணம் 138.4 மிமீ x 67.3 மிமீ x 7.3 மிமீ ஆக இருக்கிறது. இதன் எடை 144 கிராம் ஆகும். ஐபோன் எஸ்இ 4 மற்றும் ஐபோன் 14 க்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளில் ஒன்று பின்புற கேமரா அமைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone SE 4 இல் என்ன கேமராவை எதிர்பார்க்கலாம்? iPhone 15 கேமராவை கொண்டிருக்குமா?
ஐபோன் SE 4 ஆனது ஒற்றை பின்புற லென்ஸைக் கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. அதே நேரத்தில் ஐபோன் 14 இரண்டு பின்புற லென்ஸ்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஐபோன் எஸ்இ 4 ஆனது 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா லென்ஸைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடிப்படை iPhone 15 மாடலில் உள்ள பிரைமரி கேமரா லென்ஸைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 15 ப்ரோவில் இருந்து அதிரடி பட்டன் இடம்பெறும் என்றும் வதந்தி பரவியுள்ளது. லீக் ஆன தகவல்கள் துல்லியமாக இருந்தால், ஐபோன் SE 4 ஆனது தற்போதைய iPhone SE ஐ விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். இது டச் ஐடி சென்சார் கொண்ட சிறிய 4.7' இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஐபோன் SE 4, USB-C போர்ட்டைக் கொண்ட முதல் iPhone SE மாடலாகவும் இருக்கும். ஆப்பிள் ரசிகர்களின் கவனம் இப்போது ஐபோன் எஸ்இ 4 சாதனத்தின் மீது பதிந்துள்ளது.


Click it and Unblock the Notifications








