Home
News

ஆஹா.! iPhone SE 4-ல் இப்படி ஒரு அம்சமா? ஆப்பிள் ரசிகர்களே கவனிச்சீங்களா? அறிமுக தேதி இதானா? விலை என்ன?

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஐபோன் சாதனத்தை நிறுவனம் டைனமிக் ஐலேண்ட் (dynamic island) அம்சத்துடன் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபோன் SE 4 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்ச (specifications) விபரங்கள் மற்றும் இதன் விலை (price) விபரங்களுடன், இந்த போனை ஆப்பிள் நிறுவனம் எப்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது (iPhone SE 4 launch date) என்ற சில கணிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாகவே ஸ்பெஷல் எடிஷன் என்றாலே உலகளவில் உள்ள தலை சிறந்த அணைத்து பிராடுகளிலும் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆப்பிள் பிராண்டில் மட்டும் தான் SE என்ற அறியப்படும் ஸ்பெஷல் எடிஷன் சீரிஸ் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் போன் என்றாலே விலை அதிகம் என்ற எண்ணத்தை மாற்றி, பட்ஜெட் விலையில் ஸ்பெஷல் எடிஷன் போனை பட்ஜெட் பிரியர்களுக்காக வழங்குகிறோம் என்று ஆப்பிள் கூறிக்கொள்கிறது.

ஆஹா.! iPhone SE 4-ல் இப்படி ஒரு அம்சமா? ஆப்பிள் ரசிகர்களே கவனியுங்க..

ஆஹா.! iPhone SE 4-ல் இப்படி ஒரு அம்சமா? ஆப்பிள் ரசிகர்களே கவனிச்சீங்களா?

என்ன தான் ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்று கூறி விலை குறைந்த போன்களை விற்பனை செய்தாலும், ஆப்பிள் நிறுவனம் அதன் ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ மாடல்களை உலகளவில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களாக விற்பனை செய்து வருகிறது. இது மறுக்க முடியாத உண்மையே, சரி, விஷயத்திற்கு வரும், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஐபோன் SE 4 ஸ்மார்ட்போனை ஆப்பிள் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) சாதனம் வரும் மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. இதன் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த போன் குறித்த பல முக்கியமான தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம். இதற்கு முன்பு ஐபோன் 14 ப்ரோ மாடலில் மட்டும் முதல் முறையாக அணுக கிடைத்த டைனமிக் ஐலேண்ட் அம்சம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

iPhone SE 4 மொபைலில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

இருக்காமல் இருக்குமா? இப்போது அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஐபோனில் கூட இந்த அம்சத்தை நம்மால் பார்க்க முடிகிறது. வழக்கமான டிஸ்பிளே நாட்ச் அம்சத்திற்கு பதிலாக, புதிய டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய iPhone SE 4 போனில் வழங்கவுள்ளதென்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த லீக் தகவலை Evan Blass வெளிப்படுத்தியுள்ளார்.

இது தவிர இந்த iPhone SE 4 ஸ்மார்ட்போன் சாதனம் 6.06" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இது 48 மெகா பிக்சல் சிங்கிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. iPhone SE 4 மொபைல் சாதனம் A18 பயோனிக் சிப்செட் உடன் 6GB ரேம் அல்லது 8GB LPDDR5 ரேம் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய iPhone SE 4 சாதனம் USB-C போர்ட் உடன் வெளிவரும்.

ஐபோன் எஸ்இ 4 விலை (iPhone SE 4 Price):

இதன் விலை பற்றி பேசுகையில், இது தோராயமாக $499 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 41,000 முதல் ரூ. 45,000 விலைக்குள் இருக்குமென்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. பட்ஜெட் பிரியர்களின் எதிர்பார்ப்பை இந்த போன் பூர்த்தி செய்யுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone SE 4 Expected With Dynamic Island Display Check Tipsters Price Specifications and Launch Date Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X