ப்பா.. விலை இவ்ளோ கம்மியா? அம்புட்டு பேரும் இந்த iPhone-ஐ வாங்குவாங்களே! என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
புதிய ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) அறிமுகமான பின்னர் பழைய மாடல்களின் (ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12) விலைகள் குறைக்கப்பட்டாலும் கூட, பலருக்கும் பட்ஜெட் இன்னமும் இடிக்கத்தான் செய்கிறது. இந்த இடத்தில் தான் ஆப்பிளின் ஐபோன் எஸ்இ மாடல்கள் நமக்கு கைகொடுக்கின்றன.
ஐபோன் 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷன் ஆனது ஆப்பிள் வலைதளத்தில் (Apple Website) ரூ.79,900 க்கும், அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் 3% தள்ளுபடியுடன் ரூ. 77,900 க்கும் வாங்க கிடைக்கிறது. ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) மாடலின் பேஸிக் 62ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.49,999 ஆகும்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஐபோன் எஸ்இ 3 மாடலானது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 (iPhone 14) மாடலில் உள்ள அதே ஏ15 பயோனிக் சிப்பை (A15 Bionic chip) பேக் செய்கிறது. இருப்பினும் இந்த மாடலை பலரும் வாங்க தயங்க ஒரே காரணம் - காலாவதியான இதன் வடிவமைப்பு (Outdated design) தான்!
ஆனால் இந்த சிக்கல் வரவிருக்கும் அடுத்த பட்ஜெட் விலை ஐபோன் மாடலில் அதாவது ஐபோன் எஸ்இ 4 (Apple iPhone SE 4) மாடலில் தீர்க்கப்படும் என்பது போல் தெரிகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஐபோன் எஸ்இ 4-ன் சாத்தியமான தோற்றத்தை பற்றிய ஒரு பார்வையை வழங்கும் லேட்டஸ்ட் கான்செப்ட் வீடியோ (Concept Video) ஒன்று வெளிவந்துள்ளது.

அந்த கான்செப்ட் வீடியோவின்படி, ஐபோன் எஸ்இ 4 ஆனது ஐபோன் 14-ஐ போன்ற ஒரு நாட்ச் டிசைனை (Nocth Design) கொண்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அதாவது இதில் டச் ஐடி பட்டன் (Touch ID Button) அல்லது தடிமனான பெசல்கள் (Thick bezels) இல்லை என்று அர்த்தம். கூடுதலாக, ஐபோன் 15 சீரிஸில் இருந்து ஆக்ஷன் பட்டன் (Action Button) மற்றும் யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) போன்ற புதிய அம்சங்களையும் ஆதரிக்கும் என்பது போல் தெரிகிறது.
மேலும் வெளியான கான்செப்ட் வீடியோவின்படி, ஐபோன் எஸ்இ 4 மாடலானது 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே (6.1-inch OLED Display) மற்றும் 3240mAh பேட்டரியை கொண்டிருக்கும். நிச்சயமாக, உண்மையான அம்சங்கள் சற்று மாறுபடலாம். ஓஎல்இடி-க்கு பதிலாக அதிக பேட்டரி திறன் அல்லது எல்சிடி டிஸ்பிளேவை ஆப்பிள் தேர்வு செய்யலாம். தற்போதைய எஸ்இ3 மாடலானது 2018mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இந்த கான்செப்ட் வீடியோ வழியாக ஐபோன் எஸ்இ 4 மாடலில் நாங்கள் கண்ட ஒரு ஒரே குறை என்னவென்றால், இதன் ரியர் பேனலில் சிங்கிள் கேமராவை (Single Camera in rear panel) கொண்டிருப்பதே ஆகும். எது மாறினாலும் எஸ்இ மாடல்களில் காணப்படும் இந்த சிங்கிள் கேமரா செட்டப் மட்டும் மாறாது போல!
இந்த குறையிலும் உள்ள ஒரு நிறை என்னவென்றால், இது சிங்கிள் கேமராவை பேக் செய்தாலும் கூட, அது 48 மெகாபிக்சல்கள் கேமராவாக (48MP Camera) இருக்கும். இந்த ஐபோனின் 48எம்பி சென்சாரை கான்செப்ட் வீடியோவில் மிகவும் தெளிவாக காணமுடிகிறது. கூடவே இது 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறன் (4K Video Recording) கொண்டதாகவும் இருக்கும்.
கான்செப்ட் வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி ஐபோன் எஸ்இ 4 மாடலானது 4என்எம் ஏ16 பயோனிக் சிப் (4nm A16 Bionic Chip) உடன் வரும். அதாவது இது ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) போன்ற செயல்திறனை வழங்கும். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ,49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது அடுத்த ஆண்டு (2024) வாக்கில் வெளியாகலாம்.
Photo Courtesy / Source: AppleTrack X Page / @appltrack


Click it and Unblock the Notifications








