இது கனவா இல்லை நிஜமா? பட்ஜெட்டில் விலை.. தூள் கிளப்பப்போகும் iPhone SE 4.. iPhone 14-ல் இருக்க அதே அம்சம்..
ஆப்பிள் (Apple), அதன் அடுத்த பட்ஜெட் சாதனமான ஐபோன் SE 4 (iPhone SE 4) மாடலை 2024ம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது. வரவிருக்கும் ஐபோன் SE 4 ஸ்மார்ட்போன் ஐபோன் 14 (iPhone 14) மாடலுக்கு நிகரான அம்சங்களை கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான புதிய லீக் தகவல், அடுத்த ஆண்டு வரவிருக்கும் புதிய ஐபோன் SE 4 சாதனம் பற்றிய சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சில தகவல்கள் நமது ஆர்வத்தை தூண்டியுள்ளது. குறிப்பாக, இந்த iPhone SE 4 சாதனத்தின் பேட்டரி இதன் முன்னோடி மாடலான ஐபோன் SE (2022) மாடலை விட பெரியதாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.

விரைவில் ஐபோன் SE 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் (iPhone SE 4 smartphone to be launched soon):
அதேபோல், மற்றொரு லீக் தகவலின் படி, வரவிருக்கும் ஐபோன் SE 4 சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி ஐபோன் 14 (iPhone 14) சாதனத்தில் இருக்கும் அதே பேட்டரியாக இருக்க கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐபோன் 14 சாதனத்தில் இருக்கும் அதே பேட்டரி அம்சம் ஐபோன் SE 4 மாடலில் கிடைக்கிறது என்றால், உண்மையிலே இது பட்ஜெட் ஆப்பிள் ரசிகர்களுக்கு நற்செய்தியாகும்.
இந்த தகவல் எவ்வளவு உண்மையானது என்றால், ஆப்பிள் தொடர்பான லீக் தகவலை சரியாக வெளியிடும் மேக்ரூமர்ஸ் (Macrumors) பக்கத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது. இந்த பேட்டரி தகவல் அசெம்பிள் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 4 (Apple iPhone SE 4) ப்ரோட்டோடைப் (prototypes) மாடலில் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ரோட்டோடைப் சாதனத்தில் 'A2863' என்ற மாடல் எண்ணுடன் ஒரு பேட்டரி காணப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 14 சாதனத்தில் உள்ள அதே பேட்டரியா ஐபோன் SE 4 சாதனத்திலும் இடம்பெறுகிறது? (Does the iPhone SE 4 feature the same battery as the Apple iPhone 14):
இது, இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 சாதனத்தில் இடம்பெற்ற அதே பேட்டரி எண்ணை கொண்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, ஐபோன் SE 3 (iPhone SE 3) அல்லது ஐபோன் SE 2022 (iPhone SE 2022) என்று அழைக்கப்படும் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 2018mAh பேட்டரி இடம்பெற்றிந்தது. அதேசமயம், iPhone SE 4 சாதனத்தில் 3279mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி (battery) வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே 3279mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி தான் ஐபோன் 14 மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இன்னும் ஐபோன் SE 4 மாடலை உருவாக்கும் கட்டத்திலேயே வைத்துள்ளது. புதிய பகங்கங்ளை ஐபோன் SE 4 மாடலுக்காக பிரத்தியேகமாக உருவாக்குவதற்கு பதிலாக, நிறுவனம் ஐபோன் 14 கூறுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது.
ஐபோன் 15 (iPhone 15) தான் தற்போதைய லேட்டஸ்ட் மாடல் என்பதனால், ஐபோன் 14 பாகங்களை SE வெர்ஷனில் பயன்படுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது. இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன் SE 2 (iPhone SE 2) சாதனம் மற்றும் ஐபோன் 8 (iPhone 8) பாகங்களை இதே போல் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் SE 4 (2024) சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்கள் (Other features expected in the iPhone SE 4 (2024)):
ஐபோன் SE 4 (2024) சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த சாதனம் 6.1" இன்ச் கொண்ட OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது USB Type-C போர்ட் உடன் வெளிவரும் என்று தெரிகிறது. இதில் 48MP சென்சர் உடன் ட்ரூ டெப்த் கேமரா அமைப்பு (TrueDepth camera system) மற்றும் ஃபேஸ் ஐடி அம்சம் போன்ற அம்சங்களும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








