Home
News

வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் மிரட்டும் ஐபோன் எஸ்இ2.!

புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

By Prakash

புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு ஆப்பிள் நிறுவனம் புதிய தகவலை அறிவித்துள்ளது, அதன்படி ஐபோன் எஸ், வரிசையில் விரைவில் ஐபோன் எஸ்இ 2 மாடல் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் மிரட்டும் ஐபோன் எஸ்இ2.!

ஐபோன் எஸ்இ 2 சாதனம் பொறுத்தவரை அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

ஐபோன் எஸ்இ மாடல் முதலில் 2016-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது, இந்த சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.22,000-ஆக உள்ளது. மேலும் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவற்றிற்கு முன்னதாகவே இந்த ஐபோன் எஸ்இ மாடல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் மிரட்டும் ஐபோன் எஸ்இ2.!

ஐபோன் எஸ்இ 2 மாடல் ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு அனைத்து மக்களும் மிகவும் எதிர்பார்த்த வயர்லெஸ் சார்ஜிங் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன்எக்ஸ் கொண்டிருக்கும் அதே 3D-sensing தொழில்நுட்பம் இந்த ஐபோன் எஸ்இ 2 சாதனத்தில் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் மிரட்டும் ஐபோன் எஸ்இ2.!
How to Find a domain easily for your business (TAMIL)

இந்த ஐபோன் எஸ்இ 2 சாதனம் குறைந்த விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு ஐபோன் எஸ்இ 2 மாடலில் டச் ஐடி மற்றும் ஏ10செயலி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றுள் ஒற்றை பிரைமரி கேமரா மட்டுமே இடம்பெறும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இக்கருவி அதிவேக இன்டெல் எக்ஸ்எம்எம் 7560 மொடம் மற்றும் குவால்காம் எஸ்டிஎக்ஸ் 20 எல்டிஇ மோடம் போன்ற தொழில்நுட்பம் கொண்டுள்ளது. மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone SE 2 may have wireless charging; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X