Subscribe to Gizbot

4.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களிமிறங்கும் ஐபோன் எஸ்இ 2.!

Written By:

ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ஐபோன் எஸ்இ 2 மாடலுக்கு வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3டி சென்சிங் தொழில்நுட்பம் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஐபோன் எஸ்இ 2 மாடல் ஐஒஎஸ் 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். ஐபோன் எஸ்இ மாடல் முதலில் 2016-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது, இந்த சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.22,000-ஆக உள்ளது. மேலும் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவற்றிற்கு முன்னதாகவே இந்த ஐபோன் எஸ்இ மாடல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 3டி சென்சிங்:

3டி சென்சிங்:

டிஜிடைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனுக்கு 3டி சென்சிங் வசதி வழங்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்போர்ட் கிளாஸ்:

ஸ்போர்ட் கிளாஸ்:

ஐபோன் எஸ்இ 2 மாடல் ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு அனைத்து மக்களும் மிகவும் எதிர்பார்த்த வயர்லெஸ் சார்ஜிங் இந்த சாதனத்தில் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 4-இன்ச் அல்லது 4.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு ஐஒஎஸ் 12 இயங்குதளத்தை கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 சேமிப்பு:

சேமிப்பு:

ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32ஜிபி மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பேட்டரி:

பேட்டரி:

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஐபோன் எஸ்இ 2 மாடலுக்கு 1700எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இக்கருவி அதிவேக இன்டெல் எக்ஸ்எம்எம் 7560 மொடம் மற்றும் குவால்காம் எஸ்டிஎக்ஸ் 20 எல்டிஇ மோடம் போன்ற தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது. மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
iPhone SE 2 Is Not Likely to Include 3D Sensing Wireless Charging; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot