ஜியோவுடன் ஜாயிண்ட் அடித்த ஆப்பிள்: 50% விற்பனை உயர்வு!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிகளின் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்திய சந்தையில் ஆப்பிள் வளர்ச்சிப் பாதை குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்..
ஆண்டு வருவாய் 15 வருடங்களில் இல்லாதளவு குறைந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் சுமார் 50 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக டிம் குக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போமா?

கருத்து
இந்தியாவில் ஐபோன் விற்பனை குறித்துக் கூறும் போது, இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை முந்தைய ஆண்டை விடச் சுமார் 50 சதவீதம் வரை அதிகரித்து இருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை
ஆப்பிளைப் பொருத்த வரை இது துவக்கம் மட்டுமே, வளர்ந்து வரும் இந்திய சந்தையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம் என்றும் டிம் தெரிவித்தார். கடந்த காலாண்டிலும் ஆப்பிள் நிறுவனம் சுமார் 51 சதவீத விற்பனை உயர்வைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒப்பந்தம்
ரிலையன்ஸ் ஜியோவுடனான ஒப்பந்தம் குறித்துக் கூறும் போது, 'இந்தியாவில் சில மாற்றங்களை வளர்ச்சிகளாகப் பார்க்கிறோம், ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவை சுமார் 18,000 நகரங்களில் 200,000 கிராமங்களில் வழங்கப்படுவது முதல் முறையாகும்' எனத் தெரிவித்தார்.

சேவை
மேலும் 'புதிய ஐபோன் கருவிகளை வாங்குவோருக்கு ஆண்டு முழுக்க இலவச ஜியோ வழங்கப்படுகின்றது. இதனால் பயனர்கள் சிறப்பான சேவையை ஐபோனில் பயன்படுத்த முடியும்' என்றும் டிம் குக் தெரிவித்தார்.

வளர்ச்சி
இந்தியாவின் இளைய தலைமுறையினர், வளர்ந்து வரும் 4ஜி பயன்பாடு உள்ளிட்டவை ஸ்மார்ட்போன்களுக்கான தேவையை அதிகரிக்கின்றன. இந்தச் சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது என டிம் குக் தெரிவித்துள்ளார்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications