இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிப்பு: எத்தனை மடங்கு தெரியுமா?- Apple CEO மகிழ்ச்சி
ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

மலிவு விலையில் ஐபோன் அறிமுகமா
ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஐபோன் எஸ்.இ மாடல் வகை போனானது ரூ.23,999-க்கு அமேசான் இணையத்தில் கிடைக்கும். இதைவிட மலிவு விலையில் புது மாடல் ஐபோன் ஒன்றை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு
ஆப்பிள் ஒரு மலிவு விலை ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையானால் ஐபோன் எஸ்.இயின் அடிப்படை வசதி கொண்ட மாடல் போனாக இருக்க வேண்டும். மேக்ரூமோர்ஸின் அறிக்கையின்படி, பட்ஜெட் ஐபோன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய வதந்திகள் பலவற்றுடன் ஒத்துப்போகிறது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புதிய பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபோன்கள் விற்பனை இந்தியாவில் இருமடங்கு உயர்வு
இந்தியாவில் இருமடங்கு உயர்ந்து இருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். டிசம்பர் 28, 2019 வரை நிறைவுற்ற காலாண்டில் பிரேசில், சீனா, இந்தியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற வளரும் நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக டிம் குக் தெரிவித்தார். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவீதம் வரை அதிகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் விற்பனையான ஐபோன் மாடல்
மேலும் ஐபோன் விற்பனை வளர்ச்சிக்கு ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல் போன்கள் முக்கிய காரணம் என டிம் குக் சுட்டிக்காட்டினார். அதேபோல் இந்த போன் அறிமுகமான காலக்கட்டத்தில் ஐபோன் 11 மாடல் அதிகம் விற்பனையான மாடல் போனாக திகழ்கிறது.

சர்வதேச சந்தையில் 5600 கோடி டாலர்
குறிப்பாக சர்வதேச சந்தையில் ஐபோன் மூலம் கிடைத்த வருவாய் என்பது 5600 கோடி டாலர் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆர் போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி மேக் மற்றும் ஐபேட் மூலம் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 720 கோடி டாலர் மற்றும் 600 கோடி டாலர் வருவாய் ஈட்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications