ஐபோனில் எல்லோரும் மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள்.!!

By Meganathan
|

சும்மா கையில காசு இருக்கு, பந்தா காண்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஐபோன் வாங்குவோர் நம்ம ஊரில் அதிகம் பேர் இருக்கின்றனர். சிலர் அவைகளின் பயன்பாடுகளை அறிந்து வாங்குவதும் உண்டு, குறிப்பாக வியாபரிகள் பெரும்பாலும் ஐபோன் கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர் எனலாம்.

ஐபோன் கருவிகளை பயன்படுத்துவது மிகவும் கடினம் என்ற சங்கதி இருந்து வரும் நிலையில் அவைகளை பெரும்பாலானோர் சரியாக பயன்படுத்துவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எங்க காசு எங்க போன் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவோம் என நினைப்பவர்கள் தவறாக பயன்படுத்தும் போது அவை சீக்கிரம் பாழாகி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சார்ஜர்

ஆப்பிள் சார்ஜர்

ஐபோன் சார்ஜர் விலை அதிகம் என்பதால் மற்ற பிரான்டு சார்ஜர்களை பயன்படுத்துவதால் பெரும்பாலான ஐபோன்கள் வெடிக்கின்றன. மற்ற சார்ஜர்களை கொண்டு ஐபோனை வெடிக்க வைத்தவர்கள் இனியாவது ஆப்பிள் நிறுவனத்தை குறை கூறாமல் இருந்திடுங்கள்.

பாஸ்வேர்டு பாதுகாப்பு

பாஸ்வேர்டு பாதுகாப்பு

ஐபோன் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்டு பயன்படுத்துவதில்லை என தெரியவந்துள்ளது. பாஸ்வேர்டு இல்லை என்றால் ஐபோன் தொலையும் போது அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதை தவிர்க்க கடினமான பாஸ்வேர்டினை செட் செய்வது நல்லது.

வெப்பம்

வெப்பம்

ஐபோன்கள் வெப்ப நிலைகளை தாங்குவதில்லை. அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் இருக்கும் சூழ்நிலைகளில் ஐபோன் கருவிகள் நிரந்திரமாக ஷட் டவுன் ஆகும் வாய்ப்புகள் இருக்கின்றது.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

உங்களது ஐபோன் அடிக்கடி புதிய குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களை வந்திருப்பதை ஸ்கேன் செய்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல்களை அனுப்பும் போதும் அவைகளின் பேட்டரி தீர்ந்து கொண்டே இருக்கும். இதை தவிர்க்க அவைகளை ஆஃப் செய்து சீரான இடைவெளியில் குறுந்தகவல்களை சரி பார்த்து கொள்வது நல்லது.

ஆன் அல்லது ஆஃப்

ஆன் அல்லது ஆஃப்

தொடர்ச்சியாக 24 மணி நேரமும் ஐபோன் பயன்படுத்தும் போது பேட்டரி அதிக அழுத்தம் காரணமாக வேலை செய்யாமல் போகும் வாய்ப்புகள் இருக்கின்றது.

ப்ளக்

ப்ளக்

ஐபோன்களை அதிக நேரம் சார்ஜ் ப்ளக் செய்து வைப்பதை தவிர்த்து பேட்டரியின் ஒட்டு மொத்த வாழ்நாளை அதிகரிக்க முடியும்.

திரை

திரை

முடிந்த வரை ஐபோன் ஸ்கிரீன் பிரைட்னஸை குறைந்த அளவில் செட் செய்வது அதிக பேட்டரி பேக்கப் கிடைக்க வழி செய்யும்.

செயலிகள்

செயலிகள்

பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்படுத்தாமல் இருக்கும் செயலிகளை ஐபோனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்வது நல்லது. இதன் மூலம் ஐபோனின் மெமரியை சேமிக்க முடியும்.

வை-பை

வை-பை

வை-பை மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவதை பணத்தை மிச்சம் செய்யும், ஆனால் வை-பை மற்றும் ப்ளூடூத் ஆப்ஷன்களை எப்பவும் ஆன் செய்து வைப்பது ஐபோனின் பேட்டரியை சீக்கிரம் தீர்த்து விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

லொகேஷன் டிராக்கர்

லொகேஷன் டிராக்கர்

ஐபோனின் எல்லா செயலிகளுக்கும் ஜிபிஎஸ் ஆன் செய்து வைத்தால் ஒவ்வொரு நொடியும் போனின் பேட்டரி தீர்ந்து கொண்டே இருக்கும். செயலிகள் எப்பவும் உங்களது இருப்பிடத்தை டிராக் செய்ய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது, இவ்வாறு செய்வதன் மூலம் அவை உங்களை எப்பவும் பின் தொடர்வது போன்றதாகும்.

Best Mobiles in India

English summary
iPhone Mistakes Everybody Makes Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X