15மாதங்கள் ஆற்றில் மூழ்கியிருந்தும் இயங்கும் ஐபோன்: இதுதான் தரம்.!

|

ஆப்பிள் சாதனங்கள் நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படும்போதும் அவை இயங்கும் நிலையில் இருக்கும் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

 நன்றாக செயல்பட்டுக்கொண்டுஇருக்கிறது

நன்றாக செயல்பட்டுக்கொண்டுஇருக்கிறது

ஆனாலும் அவையாவும் இந்த சமீபத்திய சம்பவத்திற்கு ஈடுகொடுக்கமுடியாது. இந்த நிகழ்வில் ஒரு ஐபோன் பல மாதங்களாக நீரில் மூழ்கியிருந்த நிலையில் இன்னும் நன்றாக செயல்பட்டுக்கொண்டுஇருக்கிறது.

நுகெட் நோகின்

நுகெட் நோகின்

மைக்கேல் பென்னட் எனும் அமெரிக்க யூடியூபர் 'நுகெட் நோகின்' என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். இந்த சேனலில் அவர் புதையலை தேடி ஆறுகள் மற்றும் ஏரிகளின் அடிப்பகுதியில் டைவிங் செய்யும் வீடியோக்களை காண்பித்து வருகிறார். கடந்த காலங்களில் பல்வேறு நேரங்களில் அவர் கோப்ரோஸ், மடிக்கணினிகள் மற்றும் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில், அவர் ஒரு ஆற்றங்கரையில் இருந்து ஒரு ஐபோனைக் கண்டுபிடித்ததைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார்.

6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன்.!6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன்.!

பாசிகளால் மூடப்பட்டிருந்தது

பாசிகளால் மூடப்பட்டிருந்தது

அந்த ஐபோன் நீருக்கடியில் குப்பைகளின் கீழ் புதையுண்டு பாசிகளால் மூடப்பட்டிருந்தது. குறைந்த பட்சம் முதல் முறை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது. ஆனால் நெருக்கமாக பரிசோதிக்கையில் அது உண்மையில் ஒரு நீர்ப்புகா கேஸில் இருந்தது என்பது தெரியவந்தது. அது தெருக்களில் மலிவாக வாங்கும் வகை அல்ல.

சொன்னால் நம்பமாட்டீர்கள்

சொன்னால் நம்பமாட்டீர்கள்

பென்னட் அந்த ஐபோனை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கேமராவின் மீதுள்ள கேஸை உடைத்து திறக்க முடிவு செய்தார். அதிர்ஷ்டவசமாக அந்த கேஸின் உட்புறம் வறண்டதாக தோன்றியது. எனவே அவர் ஐபோனை சார்ஜ் செய்து அதை இயக்கியதுடன் ஒரு சிம் கார்டையும் மாட்டினார். சொன்னால் நம்பமாட்டீர்கள், அது உண்மையில் வேலை செய்தது.

17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-துண்டு கட்டா தூக்கிய போலீஸ்.!17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-துண்டு கட்டா தூக்கிய போலீஸ்.!

தண்ணீரிலேயே மூழ்கியிருத்துள்ளது

தண்ணீரிலேயே மூழ்கியிருத்துள்ளது

பென்னட் இறுதியில் அந்த ஐபோனின் உரிமையாளரான எரிகா பென்னட்( அவர்கள் முன்பின் தெரிந்தவர்கள் அல்ல) உடன் தொடர்பு கொண்டு, அந்த வாரத்தின் பிற்பகுதியில் அந்த சாதனத்தைத் திருப்பித் தந்தார். விசாரித்து பார்க்கையில், அந்த ஐபோன் தற்செயலாக ஆற்றில் விழுந்து சுமார் 14 மாதங்களாக தண்ணீரிலேயே மூழ்கியிருத்துள்ளது தெரியவந்ததது.

தொலைபேசியை ரீசெட் செய்திருந்தார்

தொலைபேசியை ரீசெட் செய்திருந்தார்

எரிகாவுக்கு தனது ஐபோனை திரும்ப பெற்றது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. ஏனெனில் அவரது தந்தை இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தனது மாற்று தொலைபேசியை ரீசெட் செய்திருந்தார். ஆகவே, ஐபோனில் சிலகாலம் காப்புப் பிரதி (Backup) எடுக்காத சில புகைப்படங்களை கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அவளுடைய அப்பாவின் உரையாடல் குறுஞ்செய்திகளும் இருந்தன.

நீ எப்படி இருக்கிறாய்?

நீ எப்படி இருக்கிறாய்?

"இது ஒருவிதமான உணர்ச்சிவசமான தருணமாக இருந்தது. ஏனென்றால் அவரிடமிருந்து நான் கடைசியாக பெற்ற குறுஞ்செய்தியில், 'ஹே, நான் உன்னுடன் போன் டேக் விளையாடுகிறேன். எனவே நான் உனக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறேன். நீ எப்படி இருக்கிறாய்?' என கேட்டதுடன், அதன்பிறகு அவர் என்னை தொலைபேசியில் அழைத்ததாக நினைக்கிறேன். மேலும் அது தந்தையர் தினம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் " என உணர்ச்சிவசப்படுகிறார் எரிகா.

Best Mobiles in India

English summary
iPhone Lost in River Found Still Working After 15 Months and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X