உலகளவில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் எது தெரியுமா? இவுங்க 2 பேர்தான் மாஸ்!

|

ஏப்ரல் மாதத்துக்கான Counterpoint அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் பிற தொழில்நுட்ப நிறுவனங்களை விட ஆப்பிள் அதிக போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சாதனங்கள் மற்றும் சாம்சங் சாதனங்கள் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. உலகம் முழுவதும் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எது என்பது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

அதிகம் விற்பனையான போன்களின் பட்டியல்

அதிகம் விற்பனையான போன்களின் பட்டியல்

உலகளவில் அதிகம் விற்பனையான போன்களின் பட்டியலில் ஆப்பிள் தான் தற்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. Counterpoint வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, பிற தொழில்நுட்ப நிறுவனங்களை விட ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் அதிக மொபைல்களை விற்றிருக்கிறது. இந்த பட்டியலில் சியோமி மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். கடந்த ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் தான் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. எந்த சாதனம் அதிகம் விற்பனையாகி இருக்கிறது என்று பார்க்கலாம்.

அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் இதுதான்

அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் இதுதான்

கடந்த ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐபோன் 13 மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 ஆகியவை அதிகம் விற்பனையான சாதனமாகும். 2022 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் சாதனங்களும் இதுதான். இந்த பட்டியலில் மொத்தம் ஐந்து ஐபோன் மாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. பிற மாடல்கள் என்ன என்பது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Counterpoint வெளியிட்ட அறிக்கை

Counterpoint வெளியிட்ட அறிக்கை

ஏப்ரல் மாதத்திற்கான Counterpoint அறிக்கை குறித்து பார்க்கையில், ஐந்து ஆப்பிள் மாடல்கள் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்து விற்பனையாகி இருக்கிறது. ஐபோன் 13 தொடரில் ஐபோன் 13 மேக்ஸ் சாதனம் தான் மிகவும் விலையுயர்ந்த மாடலாக இருக்கிறது. உலக ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையான சாதனங்களில் ஐபோன் 13 தான் 5.5 சதவீத பங்கைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. பட்டியலில் மீதமுள்ள ஐபோன் மாடல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீதமுள்ள ஐபோன் மாடல்களின் பட்டியல்

மீதமுள்ள ஐபோன் மாடல்களின் பட்டியல்

அதிகம் விற்பனையான ஐபோன் மாடல்களின் பட்டியலில் மீதமுள்ள சாதனங்கள் குறித்து பார்க்கையில், அது iPhone 13 Pro, iPhone 12 மற்றும் iPhone SE 2022 ஆகும். ஐபோன் எஸ்இ சாதனங்கள் ஐபோன் மதிப்பீட்டாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பீட்டை பெறவில்லை என்றாலும் அதன் விலை மற்றும் அம்சங்கள் காரணமாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகளவில் அதிகம் விற்பனையான மொபைல்களின் பட்டியலில் ஐபோன் SE 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

அதிகம் விற்பனையான சாம்சங் ஸ்மார்ட்போன்

அதிகம் விற்பனையான சாம்சங் ஸ்மார்ட்போன்

அதேபோல் ஏப்ரல் மாத அறிக்கையின்படி சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மொத்த விற்பனையில் 22 சதவீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. அதிகம் விற்பனையான சாம்சங் ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து பார்க்கையில், நான்கு சாம்சங் மாடல்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, 1.5 சதவீத பங்குடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. சாம்சங்கின் மிகவும் விலை உயர்ந்த சாதனம் இதுவாகும்.

ரெட்மி சாதனத்துக்கும் டாப் இடம்

ரெட்மி சாதனத்துக்கும் டாப் இடம்

தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy A13, Samsung Galaxy A03 Core மற்றும் சமீபத்தில் அறிமுகமான Samsung Galaxy A53 5G போன்ற சாதனங்களும் பட்டியலில் இருக்கிறது. இந்த பட்டியலில் டாப் 10 இடத்தில் 1.3 சதவீத பங்குடன் கடைசியாக ரெட்மி நிறுவனத்தின் சாதனமும் இடம்பிடித்துள்ளது. அது ரெட்மி நோட் 11 LTE சாதனமாகும்.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை என்ன தெரியுமா?

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,39,900 ஆக இருக்கிறது. இந்த சாதனம் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே ஆதரவுடன் கிடைக்கிறது. இது ஏ15 பயோனிக் சிப் மூலமாக இயக்கப்படுகிறது. 6.7 இன்ச் அளவுடன் கூடிய ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதி இதில் இருக்கிறது. இந்த சாதனத்தில் டிரிபிள் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதன் முன்புறத்தில் 12 எம்பி செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஃபேஸ் அன்லாக் ஆதரவு இதில் இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி விலை என்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி விலை என்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 5ஜி சாதனத்தின் 12 ஜிபி ரேம் வேரியண்ட் அமேசானில் ரூ.95,199 என விற்பனைக்கு கிடைக்கிறது. சுமார் ரூ.1 லட்சம் கொண்ட இந்த சாதனம் தான் உலகளவில் அதிகம் விற்பனையான சாம்சங் சாதனமாகும். இதில் 40 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் 108 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, இரட்டை 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் இதில் இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு இந்த சாதனம் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iPhone is the best-selling mobile phone in the world: Counterpoint Report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X