ஆப்பிள் தந்திரங்கள் : ஐபோன் வச்சிருக்கவங்க, கவனிச்சீங்களா.??

Written By:

ஆப்பிள் நிறுவன கருவிகள் அதிக பிரபலம் என்பதோடு அவைகளை பயன்படுத்துவதும் சிரமமான காரியம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கின்றது.

ஆனால் 'பழக பழக பாலும் புளிக்கும்' என்பதை போன்றே ஐபோன் கருவியை பயன்படுத்த ஆரம்பித்தால் அதன் பின் அவை பழகி விடும்.

'அட இது தெரியாம போச்சே' என அனைவரையும் சிந்திக்க தூண்டும் சில ஐபோன் தந்திரங்களை ஸ்லைடர்களில் பார்ப்போமா.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சார்ஜ்

சார்ஜ்

ஐபோன் கருவியை ஐபேட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் ஐபோனில் வேகமாக சார்ஜ் ஆகிவிடும்.

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

ஐபோன் பேட்டரி தீரும் நிலையில் கருவியை க்ரேஸ்கேல் மோடில் வைத்தால் சிறிது நேரத்திற்கு கருவியில் சார்ஜ் நீடிக்கும். இதை செட் செய்ய செட்டிங்ஸ் -- ஜெனரல் -- அக்சசெபிலிட்டி -- கிரேஸ்கேல் மோடினை ஆன் செய்யலாம்.

செயலி

செயலி

உங்களது கருவியில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் செயலிகளை கண்டுபிடிக்க செட்டிங்ஸ் -- ஜெனரல் -- யூசேஜ் -- பேட்டரி யூசேஜ் சென்று பார்க்கலாம்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

இரு நிமிடங்களில் தானாக அழிந்து விடும் குறுந்தகவல்களை ஐமெசேஜ் மூலம் அனுப்ப முடியும். இதை செய்ய கேமரா அல்லது மைக்ரோபோன் ஐகான்களை பயன்படுத்தி அனுப்பலாம்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

ஹேம் பட்டனை இரு முறை அழுத்தினால் திரையின் மேல் இருக்கும் செயலிகள் சற்றே கீழே வந்து விடும். பின் ஒரே கையில் அவற்றை பயன்படுத்த முடியும்.

ஷார்ட்கட்

ஷார்ட்கட்

அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்களை ஹோம் ஸ்கிரீனில் பட்டன் போன்று செட் செய்து கொள்ள முடியும். இதை செயல்படுத்த சஃபாரியில் குறிப்பிட்ட இணையதளத்தை க்ளிக் செய்து Add To Home Screen பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

ஐமெசேஜ்

ஐமெசேஜ்

குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் பேனலில் இருந்தே பதில் அனுப்ப கீழ் பக்கமாக ஸ்வைப் செய்தால் போதும்.

சிரி

சிரி

ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சிரி ஆப்ஷனை க்ளிக் செய்து கருவியை குரல் மூலமாகவே இயக்க முடியும்.

சஃபாரி

சஃபாரி

சஃபாரி ப்ரவுஸரில் தவறுதலாக டேப்களை க்ளோஸ் செய்து விட்டால் கவலை வேண்டாம். + பட்டனை அழுத்தி பிடித்தால் க்ளோஸ் ஆன டேப்களை மீண்டும் ஓபன் செய்து விட முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone Hidden Features that every one should know Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot