விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்தும் பாதிப்படையாத ஐபோன்: "இது" மட்டும் சேதமடைந்திருந்தது.! வைரல் வீடியோ.!

|

ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

 உலகம் முழுவதும்

மேலும் ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான சிப்செட் வசதி, பாதுகாப்பான டிஸ்பிளே, சிறந்த கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் ஐபோன்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே தான் ஐபோன் மாடல்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

விழுந்தபோது

இந்நிலையில் 2000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தபோதும் ஒரு ஐபோன் எந்த பாதிப்பும் இல்லாமல் வீடியோவை பதிவு செய்துள்ளது. தற்போது இந்த செய்தி தான் மக்களிடம் அதிக பேசு பொருளாக மாறியுள்ளது.

கடற்கரையில்

அதன்படி பிரேசில் நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்டோ காலியோட்டோ என்பவர், ரியோடி ஜெனிரோவில் இருக்கும் ஒரு கடற்கரையில் ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது விமானம் மூலம் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தனது ஐபோன் 6 எஸ் மூலம் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்.

 Find My app மூலம்

அந்த சமயம் எதிர்பாராத விதமாக காற்று வேகமாக வீசியதால், அவரின் கையில் இருந்த ஐபோன் 6 எஸ் நழுவி கீழே விழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து Find My app மூலம் ஐபோனை தேடிக் கண்டுபிடித்த அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிசயம் காத்திருந்தது.

 போடப்பட்டிருந்த ஸ்கிரட்ச்

அதாவது 2000 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஐபோன் எந்தவித சேதமும் அடையாமல் இருந்தது. ஆனால் ஐபோன் மேல் போடப்பட்டிருந்த ஸ்கிரட்ச் கார்டு மட்டும் சேதமடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துல்லியமாகவும் தெளிவாகவும்

மேலும் மற்றொரு வியப்பான விஷயம் என்னவென்றால், வீடியோ பதிவு செய்து கொண்டே ஐபோன் கீழே விழுந்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு இடத்தில் மட்டுமே காட்சிகள் தெளிவாக இல்லை. மற்ற இடங்களில் துல்லியமாகவும் தெளிவாகவும் காட்சிகளை பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் இது சார்ந்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் ஐபோன்கள் எப்போதும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் வெளிவருகின்றன, எனவே தான் மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

News Source: theelectronics.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
iPhone survives 2,000 feet drop from airplane: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X