பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் வெடித்து சிதறியது
அமெரிக்காவின் நியூ யார்க் மாகானத்தில் எரிக் ஜான்சன் என்பவரது ஐபோன் பாக்கெட்டில் வைத்திருந்த போது வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தன் கால்களில் தீ காயமுற்ற நிலையில் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 வயதான எரிக் ஜான்சன் ஐபோன் 5சியை பயன்படுத்தி வந்திருக்கின்றார். சம்பவத்தின் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன், திடீரென எனது பேன்ட் எரிவதை கண்டு ஆதிர்ச்சியடைந்து விட்டேன், பின் என் பேன்டை கழற்றி விட்டேன் அதன் பின் தான் அதில் எனது ஐபோன் இருந்ததை கவனித்தேன், என அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கும் போது, நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, விரைவில் ஐபோன் வெடித்ததற்கான காரணங்கள் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications