Home
News

வேகமாக பறந்த பிளைட்.. 16,000 அடி உயரம்.. கீழே விழுந்த iPhone.. சின்ன ஸ்க்ராட்ச் கூட இல்லை.. எப்படி?

16,000 அடி உயரத்தில் வேகமாக பறந்து கொண்டிருந்த விமானத்தில் (Flight) இருந்து தவறி விழுந்த ஐபோன் 15 (iPhone 15) சீரிஸ் மாடல் எந்தவித சேதமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை, ஜனவரி 5 ஆம் தேதி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 1282, போர்ட்லேண்ட், ஓரிகானில் இருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவிற்கு பறந்து கொண்டிருந்த போது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் காற்றழுத்த தாழ்வு சம்பவத்தை சந்தித்தது. இதில் விமானத்தின் பின்பகுதிக்கு அருகில் உள்ள ஃபியூஸ்லேஜின் என்று குறிப்பிட்ட பேனல் பிளக் கதவு, சுமார் 16,000 அடி உயரத்தில் வெடித்தது.

வேகமாக பறந்த பிளைட்.. 16,000 அடி உயரம்.. கீழே விழுந்த iPhone..

இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த வெடித்து சிதறிய இடத்தில இருந்து ஒரு ஐபோன் (iPhone) சாதனம் பார்ன்ஸ் சாலையில் நடந்து செல்லும் போது கிடைத்துள்ளது. இதே பகுதியில், பியூஸ்லேஜ் பேனல்கள் மற்றும் இன்சுலேஷன் உள்ளிட்ட வெடித்து சிதறிய விமான பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

16,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் (An iPhone that fell from a height of 16,000 feet):

இன்று போர்ட்லேண்டில் உள்ள ஒரு வீட்டு முற்றத்தில் இருந்து விமானத்தின் கதவு பிளக் ஒரு பள்ளி ஒரு ஆசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில், விமானத்தில் இருந்து தவறவிடப்பட்ட ஐபோன் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் சாதனம் சுமார் 16,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும், எந்தவிதக் கீறலும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஐபோனில் பாதுகாப்பு கேஸ் மற்றும் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் போன்றவை இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஐபோன் சாதனம் ஏரோபிளேன் மோடில் இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன் அன்லாக் செய்யப்பட்டது. அதில் விமானத்தின் பயண உறுதிப்படுத்தல் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், விமானம் 1282 பயணத்திற்கான பேக்கேஜ் உரிமைகோரல் அலாஸ்கா ஏர்லைன்ஸ் பயணிக்கு சொந்தமானது என்பதும் உறுதிப்படுத்தபட்டுள்ளது.

வேகமாக பறந்த பிளைட்.. 16,000 அடி உயரம்.. கீழே விழுந்த iPhone..

இந்த ஐபோனை கண்டுபிடித்தவர்கள், பேட்ஸ் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தை (NTSB) தொடர்பு கொண்ட போது, இது விமானத்தில் இருந்து கீழே விழுந்து, கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மொபைல் சாதனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்றொரு சாதனமும் விமானத்தில் இருந்து கீழே விளைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், என்ன மாடல்? அதில் எவ்வளவு சேதம் இருந்தது என்ற தகவல்கள் எதுவும் இன்னும் குறிப்பிடப்படவில்லை.

இதற்கு முன் பதிவான ஐபோன் சம்பவம் (A previously reported iPhone incident):

விமானத்தில் இருந்து விழுந்து ஐபோன் உயிர் பிழைப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டில், இதேபோன்ற வேறொரு நிகழ்வில், சுமார் 11,250 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து, ஒரு பைலட் தனது ஐபோன் X சாதனத்தை கீழே தவறவிட்டிருக்கிறார். பறக்கும் பிளைட்டில் இருந்து படம் எடுக்க முயன்ற போது அவருடைய ஐபோன் சாதனத்தை கீழே தவறவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

போனை தவறவிட்ட பிறகு, அந்த பைலட் ஐபோனின் "ஃபைண்ட் மை ஐபோன்" (Find my iPhone) செயலியைப் பயன்படுத்தி, சோள வயல்களில் இருந்து விழுந்த ஐபோன் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சம்பவத்திலும், ஐபோன் X சாதனம் பெரியளவு சேதத்தை சந்திக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. முதல் முறையாக ஒரு ஐபோன் 16,000 அடி உயரத்தில் இருந்து தவறவிடப்பட்டுள்ளது. அதுவும், இது எந்தவித சேதத்தையும் சந்திக்கவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone Dropped From 16000 Feet From a Moving Alaska Airlines Flight Survived Crash Without Any Scratch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X