iPhone உங்ககிட்ட இருக்கா? உடனே இந்த செட்டிங்கை மாத்துங்க.. இல்லாட்டி பேட்டரி ஆயுள் காலி..
உலகம் எங்கும் ஐபோன் (iPhone) பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவர்கள் ஐபோன் பயன்படுத்த காரணம் அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை. ஆனால் ஐபோனில் இருக்கும் ஒரு குறையாக பலர் கூறுவது அதன் பேட்டரி (Battery) செயல்பாடு தான்.
ஐபோன் பேட்டரிகள் நீண்ட நேரம் நீடிப்பதில்லை என்று பல காலமாகவே அதன் பயனர்களால் கூறப்பட்டு வருகிறது. அதன் பேட்டரி லைஃப்-ஐ (Battery life) நீட்டிக்க அப்டேட் கண்டுபிடிக்கச் சொல்லி கோரிக்கைகள் வந்த வண்ணம் தான் உள்ளது. அதற்கு தீர்வாக ஐபோனின் முன்னாள் ஊழியர் டைலர் மோர்கன் என்பவர் சில டிப்ஸ்களை நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார்.

மோர்கனின் முதல் மற்றும் முக்கியமான குறிப்பு, எப்போதும் பேட்டரியை 100% சார்ஜ் செய்யக்கூடாது (Don't charge your battery till 100%) என்பது தான். ஒவ்வொரு பேட்டரிக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம் இருக்கும். ஒவ்வொரு முறை 100% வரை சார்ஜ் (100% battery charge is dangerous) செய்யும் போதும் அதன் ஆயுட்காலம் பாதிக்கப்படும்.
உங்க ஐபோனை இப்படி சார்ஜ் செய்ய கூடாது? இந்த தவறை நீங்களும் செய்யுறீங்க தானே.! (Do not charge your iPhone like this):
எனவே 100% சார்ஜ் செய்வது, இரவு முழுவதும் சார்ஜ் (Don't leave your phone in full night charging) செய்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 80% வரை மட்டும் சார்ஜ் செய்வது பேட்டரியின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யுமாம் (80% battery charging is healthy for smartphones). அடுத்தபடியாக பேக்ரௌன்ட் ஆக்டிவிட்டியை கன்ட்ரோல் (Background activity control) செய்வது முக்கியம்.
இது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க மிகவும் அவசியமான ஒன்று என்று மோர்கன் கூறியுள்ளார். இதற்கு செட்டிங்க்ஸில் (Settings) சென்று ஜெனரல் (General) > பேக்ரௌன்ட் ஆப் ரிஃப்ரெஷ் (Background app refresh) என்பதை தேர்வு செய்ய வேண்டுமாம். ஆப்களை வைஃபையில் அல்லது ஆப் ஓப்பனாக இருக்கும்போது மட்டுமே அப்டேட் ஆகலாம் என்று செட்டிங் செய்து வைத்தால் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்குமாம்.
செயல்பாட்டில் இல்லாத ஆப்ஸ்களுக்கு லொகேஷன் (Location) சார்ந்த சேவைகளை டிஸேபில் (Disable) செய்து வைக்க வேண்டும். செட்டிங்க்ஸ் > ப்ரைவசி அன்ட் செக்யூரிட்டி (Privacy and Security) > லொகேஷன் சர்வீசஸ்-ற்கு (Location Services) சென்று எந்தெந்த ஆப்கள் எப்போது லொகேஷன் சேவையை பயன்படுத்தலாம் என்பதை கட்டுப்படுத்தினால் பேட்டரி ஆயுளை நீட்டிக்கலாம் என்று மோர்கன் கூறியுள்ளார்.

உடனே ஐபோன் செட்டிங்ஸ் இல் இதை மாற்றவும் (Change it in iPhone Settings right away):
அதேபோல அடிக்கடி பயன்படுத்தாத ஹே சிரி (Hey, Siri) போன்ற செயல்பாடுகளையும் டிஸேபில் செய்வது பேட்டரிக்கு நல்லதாம். மேலும், ஆட்டொமேடிக் அப்டேட்களை (Automatic updates) டிஸேபில் செய்வது, திரையின் ப்ரைட்னஸை (Brightness) குறைவாக வைப்பது, ப்ளூடூத்தை ஆஃப் செய்து வைப்பது போன்ற செயல்படுகள் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவும் என்று மோர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பேட்டரியை பாதுகாப்பது மட்டுமின்றி ஐபோனை சிறப்பாக பயன்படுத்த சில டிப்ஸ்களையும் மோர்கன் பகிர்ந்துள்ளார். அதில் முதல் குறிப்பு, கேமராவின் ஷட்டர் பட்டனை லாங் ப்ரெஸ் (Long-press) செய்து ஹோல்டில் (Hold) வைத்தால் கேமரா விடியோ மோடிற்கு சென்று விடுமாம். அதுமட்டுமின்றி ஷட்டரை ஹோல்ட் செய்துகொண்டு விடியோ பதிவு செய்யும்போது திரையில் மேலே கீழே ஸ்வைப் (Swipe) செய்தால் காட்சியை ஜூம்-இன் (Zoom-in) அல்லது ஜூம்-அவுட் (Zoom-out) செய்ய முடியுமாம்.
ஒரு கையில் ஐபோனை பயன்படுத்தும் போது கீபோர்டை கையாள்வது சிரமமாக இருக்கலாம். அதற்கு கிபோர்டில் இருக்கும் க்ளோப் சிம்பளை (Globe symbol) லாங் ப்ரஸ் செய்தால் கீபோர்டை வலது அல்லது இடது ஓரத்திற்கு செட் செய்து கொள்ளும் ஆப்ஷன் தோன்றும் என்றும் மோர்கன் கூறியுள்ளார். இவருடைய டிப்ஸ் பலருக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்ததா என்று கமெண்டில் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








