அப்பாடா.. ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.!

Written By:

அனுதினமும் ஆயிரமாயிரம் ஸ்மார்ட்போன்களின் லீக்ஸ் தகவல்கள் கிடைக்கிறது. ஆனால், அவைகளெல்லாம் நோக்கியா அல்லது ஐபோன் லீக்ஸ் தகவல்கள் போல் மிக சுவாரசியமான ஒன்றாய் ஆகிடுமோ..?? - என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்கிறது.

அதனால் தான் உங்களை போன்றே நாங்களும் எப்போது ஐபோன் லீக்ஸ் தகவல்கள் வெளியாகும், எப்போது அதை உங்களுக்கு வழங்கலாம் என்று காத்து கிடக்கிறோம்.!

ஒவ்வொரு ஐபோன் வெளியீட்டுக்கு முன்பும் ஆப்பிள் 'வெறியர்கள்' அல்லது தீவிர ரசிகர்கள் தேவைக்கும் அதிகமான பணத்தை சேர்த்துக்கொள்வது வழக்கம், ஐபோன் 8 கருவிக்கும் அதேயே தான் நீங்கள் செய்ய வேண்டியதிருக்கும். இப்போது வரையிலாகவே வரவிருக்கும் ஐபோன் 8 கருவி பற்றிய குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய பல அறிக்கைள் வெளியாகியுள்ள போதிலும் அதன் விலை பற்றிய தகவல்கள் முற்றிலும் தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு நம்பகமான மூலங்களின் படி ஆப்பிள் கசிவுகள் மற்றும் அதன் விலை என்னவாக இருக்கும் என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இரண்டு ஆதாரங்கள்

இரண்டு ஆதாரங்கள்

இதை இரண்டு ஆதாரங்கள் உறுதி செய்கிறது - ஒன்று அடுத்த ஆப்பிள் கருவி ஹெட்போன் ஜாக் இல்லாமல் வெளிவரும் என்று கணித்த மேக் ஓடாகாரா (MacOtakara) மற்றொன்று ஒரு மதிப்பிற்குரிய ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங் கை க்வோ (Ming-Chi Kuo).

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உறுதி

உறுதி

இந்த இரண்டு ஆதாரங்களும் 2017-இல் அறிமுகமாகும் ஐபோன் 8 கருவியின் விலை இதுவரை இல்லாத அளவு விலை அதிகமாகத்தான் இருக்கும் என்று உறுதி செய்துள்ளது.

வேகமான செயலி, சிறந்த கேமரா

வேகமான செயலி, சிறந்த கேமரா

ஓடாகாரா வெளியிட்ட அறிக்கை, 2017-ஆம் ஆண்டில் அறிமுகமாகும் ஐபோனின் மாடல் சரியாக தற்போதைய ஐபோன் 7 போலவே தான் இருக்கும். ஆனால் ஒரு வேகமான செயலி, சிறந்த கேமரா மற்றும் ஒரு சிவப்பு வண்ண மாறுபாடு கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.

அடிப்படை மாடல்கள்

அடிப்படை மாடல்கள்

மறுபக்கம் ஆப்பிள் கருவிகளின் மதிப்பிற்குரிய ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங் கை க்வோ, 2017-ல் வரும் அடிப்படை மாடல்கள் வெளியிடப்படும் மற்றும் அவைகள் ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் எனப்படும் என்று கூறுகிறார். எனினும், பிரீமியம் மாடல் ஆன ஐபோன் 8 கருவியும் அதனுள் ஒன்றாக திகழும் என்கிறார்

சிறந்த அம்சங்கள்

சிறந்த அம்சங்கள்

உடன் வெளியாகும் அடிப்படை மாடல்கள் ஆன ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளானது தற்போதைய ஐபோன் 7 போன்ற விலை கொண்டிருக்கும். எனினும், இந்த மாதிரிகளில் ஓல்இடி காட்சி மற்றும் வயர்லெஸ் சார்ஜ் உட்பட சிறந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என்கிறார் க்யோ.

அதிக விலைக்கு காரணம் என்ன.?

அதிக விலைக்கு காரணம் என்ன.?

வெளியாகப்போகும் ஐபோன் 8 தலைமை கருவியானது வழங்கப்படும் அம்சத்தின் காரணமாக சுமார் 150 டாலர்கள் தொடங்கி 200 டாலர்களுக்கும் அதிகமான விலை அதிகாரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவிலான விலை அதிகரிப்புக்கு அதன் வன்பொருள் மேம்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆடம்பரம்

ஆடம்பரம்

ஒரு நிறுவனம் என்ற வகையில், ஆப்பிள் விலைக்கு ஏற்ற புதுமையான மற்றும் அழகான சாதனங்களை உருவாக்க நிறுவனமாக அறியப்படுகிறது. எனினும், வரவிருக்கும் ஐபோன் 8 கருவியின் விலையை பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் மிகவும் ஆடம்பரம் வாய்ந்த கருவியை வெளியிடுவதை தொடர்கிறது என்பது நிதர்சனம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

விரைவில் : ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 5 நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
iPhone 8 Price Latest News and Updates. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot