ஐபோன் 7 ரகசியமாய் கசிந்த 7 அம்சங்கள்.!!

By Meganathan
|

கலிஃபோர்னியா ஆப்பிள் ஆய்வகங்களில் ரகசியமாக தயாரிக்கப்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவியில் வழங்கப்பட இருக்கும், நீக்கப்பட இருக்கும் அம்சங்கள் என இணையத்தில் செய்திகள் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றது.

உலகெங்கும் இருக்கும் பல்வேறு ஆப்பிள் வல்லுநர்களும் ஆப்பிள் நிறுவனம் புதிய கருவியில் வழங்க இருக்கும் அம்சங்கள் குறித்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகின்றனர். இவை எதுவம் ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், புதிய ஐபோன் குறித்த ஆவல் குறையவில்லை.

அந்த வகையில் ஐபோன் 7 கருவியில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் 7 அம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

1

1

ஐபோன் 6எஸ் மற்று் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளின் ஹார்டுவேர் அம்சங்கள் மற்றும் திரையின் அளவு, வடிவமைப்பு போன்றவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும்.

2

2

ஆனால் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 7 கருவியில் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே போன்ற ஷார்ப் அக்வா க்ரிஸ்டல் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக திரையின் ரெசல்யூஷன் அதிகமாக இருக்கும் என்றே கூறலாம்.

3

3

எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் புதிய கருவியில் ஹோம் பட்டன் வழங்காது என்றும் கூறப்படுகின்றது. ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் கருவிகளில் இருப்பதை போன்ற திரையுடன் கூடிய ஆன்-ஸ்கிரீன் பட்டன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4

4

அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்குவதோடு டச் ஐடி சார்ந்த ஹார்டுவேர்களில் அதிக மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. இதன் மூலம் கருவியை அன்லாக் செய்வது எளிமையாகி விடும்.

5

5

புதிய ஐபோன் கருவியில் 3.5 எம்எம் ஜாக் வழங்கப்பட மாட்டாது என்ற தகவல் சில காலமாக இணையத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில் புதிய கருவி லைட்னிங் ஹெட்போன்களை கொண்டிருக்கும். மேலும் வயர்லெஸ் ஹெட்போன்களை கொண்டு இசையை ரசிப்பதோடு அழைப்புகளையும் ஏற்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

6

6

ஹெட்போன் ஜாக் அகற்றப்பட்ட நிலையில் புதிய ஐபோன் கருவியின் பேட்டரி திறன் அதிகமாக வழங்கப்படலாம். ஆனால் எந்தளவு அதிகமாக வழங்கப்படும் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும்.

7

7

தற்சமயம் ஆண்ட்ராய்டு கருவிகளில் வழங்கப்படுவதை போன்றே புதிய ஐபோன் கருவியிலும் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்பட்டால் கருவியில் விலை கனிசமாக அதிகமாகவே இருக்கும். ஏற்கனவே இவைகளின் விலை அதிகம் தான் என்ன செய்வது.

8

8

மே 17 முதல் மோட்டோ ஜி4 : இது புதுசு கண்ணா.!!

ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய நீரும் நெருப்பும் போதும்.!!

9

9

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
iPhone 7 LEAKED online awesome Features to Expect Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X