ஆப்பிள் - ஆண்ட்ராய்டு போட்டி : முன்னிலையில் ஆப்பிள் நிறுவனம்.!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வெளியாகி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. புதிய கருவியை சில பெரிய மாடல் போன்களுடன் ஒப்பிடும் வழக்கம் உலகெங்கும் வேகமாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு கருவிகளுடன் ஒப்பிடப்பட்டாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது பஞ்சாயத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சார்ந்தே நிறைவடையும். அதன் படி கீக்பென்ச் எனும் வன்பொருள் ஒப்பீட்டு நிறுவனம் வழங்கியிருக்கும் புதிய தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது என்றாலும் உண்மை இதுவாகவே இருக்கின்றது.

தகவல்கள்

தகவல்கள்

உலகெங்கும் பேராவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஐபோன் 7 தான் வேகமான கருவி என்ற செய்தி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. புதிய ஐபோனில் இருக்கும் வன்பொருள் குறித்து விரிவான தகவல்களை ஆப்பிள் வழங்கவில்லை.

கீக்பென்ச்

கீக்பென்ச்

இதைத் தொடர்ந்து கீக்பென்ச் குறியீடுகளில் ஐபோன் 7 பிளஸ் கருவியானது சிங்கிள் கோர் செயல்பாட்டில் மட்டும் 3233 புள்ளிகள் பெற்றுள்ளது. மல்டி-கோர் செயல்பாட்டில் மொத்தம் 5363 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

புள்ளி

புள்ளி

கீக்பென்ச் குறியீடுகளில் இத்தனை புள்ளிகள் பெற்ற முதல் மொபைல் இது என்பதோடு, உலகளவில் வெளியான அதி வேகமாக மொபைல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமெனில் ஐபோன் 7 பிளஸ் கருவியானது கேலக்ஸி நோட் 7 அல்லது நெக்சஸ் 6பி போன்ற கருவிகளை விட இரு மடங்கு வேகமானதாகும்.

வன்பொருள்

வன்பொருள்

புதிய ஐபோனின் அறிமுக விழாவில் ஐபோன் 7 கருவியில் ஏ10 ஃபியூஷன் (A10 Fusion) பிராசஸர் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வகை பிராசஸர் ஆப்பிள் ஐபேட் ப்ரோ 9.7 கருவியில் வழங்கப்பட்ட ஏ9எக்ஸ் பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிராசஸர்

பிராசஸர்

ஏ10 ஃபியூஷன் பிராசஸர் குறித்து சில தகவல்களை வழங்கிய ஆப்பிள் பெரும்பாலான தகவல்களை வழங்கவில்லை. ஏ10 ஃபியூஷன் பிராசஸர் ஐபோன் 6 கருவியை விட இரு மடங்கு வேகமானது, மேலும் மூன்று மடங்கு சிறப்பான கிராஃபிக்ஸ் செயல்பாடு வழங்கும் ென தெரிவித்தது.

பேட்டரி

பேட்டரி

ஐபோன் 7 கருவியானது ஐபோன் 6எஸ் கருவியை விட இரண்டு மணி நேரக் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும், ஐபோன் 6எஸ் பிளஸ் கருவியை விட ஐபோன் 7 பிளஸ் கருவியில் ஒரு மணி நேரக் கூடுதல் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

சில காலமாக ஆண்ட்ராய்டு தயாரிப்பாளர்கள் பின்பற்றி வந்த இரண்டு-கோர் பிராசஸர்களை தொடர்ந்து ஏ10 ஃபியூஷன் பிராசஸரில் 4 கோர்கள் இருக்கின்றன. இவ்வகை பிராசஸர்கள் ஆனது ARM நிறுவனத்தின் big.LITTLE தொழில்நுட்பத்தைச் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

குவாட்கோர்

குவாட்கோர்

மேலும் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் குவாட்-கோர் சிப்செட் ஆகும். இதன் மூலம் அதிகளவு செயல்பாடு மற்றும் பேட்டரி சேமிப்பு உள்ளிட்டவற்றை சீராக இயக்க முடியும். அதாவது ஏ9 பிராசஸர்களை விட 40 சதவீதம் சிறப்பாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

ஏ10 ஃபியூஷன் பிராசஸரில் big.LITTLE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும் இதன் வடிவமைப்பு ஒரே மாதிரியானது தான். ஆனால் ஆப்பிள் நிறுவனம் என்பதால் அத்தனை கோர்களையும் தானாகவே தயாரித்து கொள்ளும். ஆண்ட்ராய்டு சிபியு தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கோர்களை தயாரித்துக் கொள்ளும்.

இடைவெளி

இடைவெளி

ஆண்ட்ராய்டு தயாரிப்பாளர்கள் இந்தப் போட்டியை சமாளிப்பது மிகவும் கடினமானதாகும். ஐபோன் 6எஸ் கருவியில் வழங்கப்பட்ட ஏ9 சிப்செட் ஏற்கனவே அதிவேகமானதாகும், இந்நிலையில் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்தப் போட்டியை கடினமாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
iPhone 7 is fastest smartphone ever, Android phones far behind Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X