Home
News

அக்டோபரில் அசத்த வரும் ஆப்பிள் ஐபோன் 7.!

By Meganathan

பல மாதங்களாக உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் அமெரிக்காவின் சான் ஃபிராசிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் நேற்று இரவு அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. சில நாடுகளில் அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய ஐபோன் கருவிகள் இந்தியாவில் அக்டோபர் 7 தேதி வெளியாக இருக்கின்றது.

ஐபோன் 7 கருவியின் விலை ரூ.60,000 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மற்ற கருவிகளின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.

ஐபோன் 7

ஐபோன் 7

அமெரிக்காவில் 32 ஜிபி ஐபோன் 7 விலை $649 அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,000, 32 ஜிபி ஐபோன் 7 பிளஸ் விலை $769 அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,000 ஆகும்.

கருவி

கருவி

புதிய கருவிகளில் ஆப்பிள் இன்டர்னல் மெமரி அளவுகளைப் பொருத்த வரை 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்ளிட்ட அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் இந்த வாரம் வெள்ளிக் கிழமை (09/09/2016) துவங்கி விற்பனை செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.

அறிமுகம்

அறிமுகம்

புதிய ஐபோன் கருவிகளில் புதுவித வடிவமைப்பு மற்றும் கருப்பு (Matte Black, Glossy Black) என இருவித புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கோல்டு, சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களிலும் கிடைக்கின்றது.

ஃபோர்ஸ் சென்சிட்டிவ்

ஃபோர்ஸ் சென்சிட்டிவ்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் மாற்றிமையக்கப்பட்ட ஹோம் பட்டன் ஃபோர்ஸ் சென்சிட்டிவ் அம்சம் கொண்டிருக்கின்றது. மேக்புக் கருவிகளில் இருக்கும் டிராக்பேட் போன்று இது வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர்

தண்ணீர்

புதிய கருவிகளில் ஐபி 67 (IP67) சான்று இருப்பதால் தூசி மற்றும் தண்ணீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கேமராக்களிலும் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேமரா

கேமரா

ஐபோன் 7 கருவியில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், 6-எலிமென்ட் அப்ரேச்சர் லென்ஸ் 12 எம்பி பிரைமரி கேமரா, குவாட்-எல்இடி மற்றும் ட்ரூ டோன் பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

என்ஜின்

என்ஜின்

இதோடு புதிய ஐபோன் கேமராக்களில் இமேஜ் பிராசஸிங் என்ஜின் வழங்கப்பட்டிருப்பதால் அதிக துல்லியமான புகைப்படங்களை அதிவேகமாக எடுக்க முடியும்.

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ் கருவியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைடு-ஆங்கிள் லென்ஸ், 56 எம்எம் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கருவியில் 10x அளவு சூம் செய்ய முடியும்.

சிப்

சிப்

அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் ஏ10 பியூஷன் 64-பிட் குவாட் கோர் சிப் வழங்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய கருவிகளை விட அதிக பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. கருவியின் மேற்புறம் ஒன்றும் கீழ் பக்கம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்போன் ஜாக் அகற்றப்பட்டு விட்டது. இதனால் புதிய கருவிகளில் லைட்னிங் போர்ட் மூலம் இசையைக் கேட்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 7, iPhone 7 Plus Price and Launch Date in India Revealed Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X