ஐபோன் 7 விலை இது தான், நீங்க வாங்க போகிறீர்களா.??

Written By:

இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிளின் விலையை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் இந்தியா இணையதளத்தில் புதிய கருவிகளின் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி மாடல் ரூ.72,000 என்றும் 32 ஜிபி ஐபோன் 7 கருவியின் விலை ரூ.60,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 கருவியின் 128 ஜிபி மாடல் ரூ.70,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.80,000க்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

ஐபோன் 7 விலை இது தான், நீங்க வாங்க போகிறீர்களா.??

ஐபோன் 7 பிளஸ் 128 ஜிபி ரூ.82,000 மற்றும் 256 ஜிபி ரூ.92,000 வரை விற்பனை செய்யப்பட இருக்கின்றது. ஏற்கனவே அறிவித்ததை போல அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புதிய ஐபோன் கருவிகளின் விற்பனை துவங்க இருக்கின்றது. ஏற்கனவே சில விநியோகஸ்தர்கள் புதிய ஆப்பிள் கருவிகளுக்கான முன்பதிவுகளைத் துவங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் சார்பில் புதிய கருவிகளின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் ஆப்பிள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய கருவிகளின் விற்பனை துவங்க இருப்பதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்தியிருப்பதோடு ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்இ உள்ளிட்ட மாடல்களின் விலையைக் குறைத்திருக்கின்றது.

விற்பனை துவங்கிவிட்ட சில நாடுகளில் ஐபோன் 7 கருவிகளின் விற்பனை ஆப்பிள் நிறுவனப் பங்குகளை உயர்த்தி ஆப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் புதிய கருவிகளின் விற்பனை இந்தியாவில் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
iPhone 7, iPhone 7 Plus Price in India Revealed Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot