ரூ.1700க்கு ஆப்பிள் ஐபோன் 7? ஆனால் ஒரு நிபந்தனை.!

Written By:

இந்தியாவில் எத்தனை ஸ்மார்ட்போன் கருவிகள் வெளியானாலும், நம்மவர்களுக்கு ஐபோன் மீதான மோகம் அதிகம் ஆகும். உலகின் எல்லா நாடுகளிலும் இந்த மோகம் இருக்கத் தான் செய்கின்றது. ஆப்பிள் மீதான மோகம் ஒரு பக்கம் இருந்தாலும் ஐபோன் கருவிகளை வாங்குவது அத்தனை சுலபம் கிடையாது இதற்கு அதிக விலை மட்டுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு சில நாடுகளில் இந்தக் கருவிகளின் விற்பனை எதிர்பார்க்கப்பட்டதை விட நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சரிவில் இருந்த ஆப்பிள் பங்குகள் நல்ல உயர்வை எட்டுமளவு ஐபோன் 7 விற்பனை நடைபெற்று வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விற்பனை:

விற்பனை:

இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கான விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக விலை என்பதால் தவனை முறையில் வாங்க அதிக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார்:

ஆதார்:

இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஆதார் அடிப்படையில் எளியத் தவனை முறையினை அமல்படுத்த இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்பணம்:

முன்பணம்:

அதன் படி இந்திய ஆப்பிள் பிரியர்கள் தங்களது ஆதார் அட்டைக் காண்பித்து ரூ.1700 எனும் முன்பணத்தைச் செலுத்தி புதிய ஐபோன்களை பெற முடியும் எனக் கூறப்படுகின்றது. இந்தத் தவனை முறையைச் சாத்தியமாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

துவக்கம்:

துவக்கம்:

ஆப்பிள் ஐபோன் கருவிகளுக்கான முன்பதிவுகளைப் பிரபல ஆப்பிள் வர்த்தகர்களும் துவங்கி விட்டனர். இத்துடன் ஆப்பிள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் புதிய கருவிகளை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும்.

முன்பதிவு:

முன்பதிவு:

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான யுனிகான் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகளைத் துவங்கியுள்ளது. புதிய ஐபோன்களை வாங்க முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். தில்லியைச் சேர்ந்த யுனிகான் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஐபோன்களை விற்பனை செய்து வருகின்றது.

அறிவிப்பு:

அறிவிப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய மின்சாதன நிறுவனங்களாகிய க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளன. ஆப்பிள் இந்தியா சார்பில் முன்பதிவு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

விநியோகம்:

விநியோகம்:

ஆப்பிள் இந்தியாவின் விநியோக நிறுவனமான பீடெல் டெலிடெக் நிறுவனம் புதிய ஐபோன்களுக்கான விநியோகத்தினை அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 7 மணிக்குத் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஐவொல்டு மற்றும் யுனிகான் நிறுவனங்கள் புதிய ஐபோன் கருவிகளை அக்டோபர் 7 ஆம் தேதி 12.00 மணி முதல் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளன.

விலை:

விலை:

இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த பட்சம் ரூ.60,000 முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாக 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஐபோன் 7 ரூ.60,000க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாடல்

மாடல்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வகைகளில் கிடைக்கின்றது. மேலும் சில்வர், கோல்டு, ரோஸ் கோல்டு, பிளாக் மற்றும் ஜெட் பிளாக் நிறங்களிலும், ஜெட் பிளாக் நிற கருவிகள் 128 மற்றும் 256 ஜிபி மெமரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 7:

ஐபோன் 7:

புதிய ஐபோன் 7 கருவியில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, 3டி டச், ஐபோன் 7 பிளஸ் கருவியில் 5.5 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே 3 டி டச் வழங்கப்பட்டுள்ளன. இரு கருவிகளிலும் புதிய வகை ஏ10 ஃபியூஷன் பிராசஸர் மற்றும் ஐஓஎஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone 7, iPhone 7 Plus available for pre-orders in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்