ஐயன் மேன் தீம் கொண்ட ஐபோன் 7 எட்ஜ் கான்செப்ட் புகைப்படங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவி வெளியாகும் வரை இது போன்ற தகவல்கள் மற்றும் செய்திகள் தினமும் வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் மீசட் ஜி டிசைன்ஸ் தரப்பில் வெளியாகி இருக்கும் சில கான்செப்ட் புகைப்படங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஐயன் மேன் தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களின் பட்டியலை பாருங்கள்..

தீம்
வெளியாகி இருக்கும் ஐபோன் 7 புகைப்படங்கள் மார்வெல் நாயகன் ஐயன் மேன் சிறப்பு தீம்கள் கொண்டிருக்கின்றன.

எட்ஜ்
ஐபோன் 7 எட்ஜ் பெயருக்கு ஏற்ப கண்ணாடிகளை கொண்ட வளைந்த டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் கொண்ட பின்புறம் இருக்கின்றது.

கேமரா
இந்த புகைப்படங்களில் கேமரா நடுவில் இல்லாமல் ஓரமாக வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹோம் பட்டன்
ஹோம் பட்டன்கள் விர்ச்சுவல் முறையில் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

கேமரா
கேமராவை பொருத்த வரை 20 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது.

சிம் கார்டு
நானோ சிம் கார்டு ஸ்லாட் போனின் கீழ் பக்கமாக வழங்கப்பட்டிருப்பதோடு ஆறு ஸ்பீக்கர் ஓட்டைகள் மற்றும் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டிருக்கின்றது.

வால்யூம்
வால்யூம் கன்ட்ரோல்கள் வளைந்த ஸ்கிரீனில் இயங்குபடி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

பேட்டரி
வழக்கமான சிறப்பசங்களுக்கு சரியாக ஒத்துழைக்கும் 3300 எம்ஏஎஹ் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மெமரி
128 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் மற்றும் ஐஓஎஸ் 9 இயங்குதளம் கொண்டிருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இவைகளில் மாறுதல்கள் ஏற்படுவது ஆப்பிள் நிறுவனத்தை சார்ந்தது.
புகைப்படம் : Mesut. Designs


Click it and Unblock the Notifications