இந்த வருடம் இரண்டு இல்லை மூன்று, ஆப்பிள் ரகசியம் வெளியானது.!!

Written By:

முன்னதாக ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபோன் கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியானது அனைவரும் அறிந்ததே. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் என இரு ஐபோன் கருவிகளும் வழக்கம் போலச் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபோன் 7 ப்ரோ எனப் புதிய கருவியும் இந்த ஆண்டு ஆப்பிள் பட்டியலில் இணைந்திருப்பதாகச் சீன சமூக வலைத்தளமான வெய்போவில் தகவல் கசிந்துள்ளது.

மேலும் மூன்று புதிய ஐபோன் மாடல்களின் விலையும் கசிந்துள்ளது. வெளியாக இருக்கும் கருவிகள் குறித்து இதுவரை வெளியான தகவல்கள் மற்றும் அவற்றின் விலைகளை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹோம் பட்டன்

ஹோம் பட்டன்

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஐபோன் 7 கருவிகளில் ஹோம் பட்டன் வழங்கப்படமாட்டாது எனத் தெரியவந்துள்ளது. மேலும் 3.5 எம் எம் ஹெட்போன் ஜாக் இம்முறை அகற்றப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

புதிய ஆப்பிள் கருவிகளில் வாட்டர் ப்ரூஃப் அம்சம் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேம்

ரேம்

ஆப்பிள் ஐபோன் 7 கருவிகளில் அதிகம் மேம்படுத்தப்பட்ட ரேம் மற்றும் டூயல் கேமரா போன்ற அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லென்ஸ்

லென்ஸ்

புதிய ஆப்பிள் கருவியில் டிஎஸ்எல்ஆர் தரத்தில் டூயல் லென்ஸ் கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

திரை

திரை

ஐபோன் 7 கருவிகளில் 4.7 இன்ச் அல்லது 5.5 இன்ச் போன் திரை வழங்கப்படலாம் என்றும் முந்தைய கருவிகளை விடப் புதிய கருவிகள் மெலிதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கேமரா

கேமரா

ஐபோன் 7 கருவியில் அதிகபட்சம் 12 எம்பி வரை ப்ரைமரி கேராவும், 1080பி ரெசல்யூஷன் கொண்ட முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம்.

விலை

விலை

32 ஜிபி ஐபோன் 7 கருவியின் இந்திய விலை ரூ.52,983, 64 ஜிபி ரூ.60,999, 256 ஜிபி ரூ.71,018 மற்றும் ஐபோன் பிளஸ் 32 ஜிபி ரூ.60,999, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி முறையே ரூ.69,014 மற்றும் 79,014 என்ற விலையில் வெளியிடப்படலாம்.

ஐபோன் 7 ப்ரோ

ஐபோன் 7 ப்ரோ

32 ஜிபி ஐபோன் 7 ப்ரோ விலை ரூ.71,018, 32 ஜிபி ரூ.79,014 மற்றும் 256 ஜிபி ரூ.89,000க்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனை

விற்பனை

இந்தியாவைப் பொருத்த வரை புதிய ஆப்பிள் கருவிகள் சீனாவை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றே கூறப்படுகின்றது. இந்தியாவில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் கருவிகள் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் விற்பனை குறைவாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

முந்தைய ஸ்லைடர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone 7, 7 Plus, 7 Pro prices leak on Chinese website Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot