பொறுமையில்லாதவங்க ரூ,1,14,999க்கு புதிய ஐபோனை வாங்கிகோங்க..!!

Posted By:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் மாடல்கள் உலகம் முழுவதிலும் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றது. விற்பனையில் அந்நிறுவனத்தின் முந்தைய சாதனைகளை அந்நிறுவனமே முறியடித்து வரும் நிலையில் இந்தியாவில் புதிய ஐபோன் கருவிகள் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.

பொறுமையில்லாதவங்க ரூ,1,14,999க்கு புதிய ஐபோனை வாங்கிகோங்க..!!

இந்நிலையில் இந்தியாவின் சில ஆன்லைன் வரத்தக நிறுவனங்களில் புதிய ஐபோன் கருவியினை ரூ.1,14,999க்கு வாங்க முடியும் என்ற விளம்பரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு கிடைக்கும் ஐபோன்களுக்கு வாரன்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறுமையில்லாதவங்க ரூ,1,14,999க்கு புதிய ஐபோனை வாங்கிகோங்க..!!

இதை தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகள் ஈபே மற்றும் ஓஎல்எக்ஸ் போன்ற தளங்களில் கிடைக்கின்றது. இறக்குமதி செய்யப்பட்ட புதிய ஐபோன் கருவிகளின் விலை அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன. ஐபோன் 6எஸ் 16ஜிபி மாடல் ரூ.69,999, 64ஜிபி ரூ.84,999க்கும் 128ஜிபி ஐபோன் 6எஸ் ரூ.1,14,999க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் ஈபே கியாரன்டியில் கிடைக்கின்றன.

ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் ஐபோன் 6எஸ் 64ஜிபி விலை ரூ.75,000க்கும், க்விக்கர் தளத்தில் 16ஜிபி ஐபோன் 6எஸ் ப்ளஸ் ரூ.65,000க்கும் விற்பனை செய்யப்பட்டுன்றது.

 

Read more about:
English summary
iPhone 6S models make Indian e commerce 'debut' at Rs 1,14,999
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்