இந்தியர்களுக்கு மட்டும் அதிக விலை ஆப்பிள் திட்டம்..!!

Written By:

அதிக எதிர்பார்ப்புகளை கடந்து ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 6எஸ் மாடல்கள் இந்தியாவில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்றன. எப்படியும் அதிக விலை இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இத்தனை விலைக்கு இந்த கருவிகள் தகுந்ததா என்பதை விட இதனை எப்படியேனும் வாங்கி விட பல ஆப்பிள் ப்ரியர்கள் இந்தியாவிலும் இருக்க தான் செய்கின்றனர்.

இந்தியர்களுக்கு மட்டும் அதிக விலை ஆப்பிள் திட்டம்..!!

இணையத்தில் பரவும் செய்திகளும், சந்தை நிலவரங்களையும் வைத்து பார்க்கும் போது புதிய ஐபோன் கருவிகள் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாடுகளை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

அதன்படி இந்தியாவில் ஐபோன் 6எஸ் 16ஜிபி, 64ஜிபி, 128ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ.62,000, ரூ.72,000 மற்றும் ரூ.82,000 என்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவி 16ஜிபி, 64ஜிபி, 128ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ.72,000, ரூ.82,000 மற்றும் ரூ.92,000 வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்தியர்களுக்கு மட்டும் அதிக விலை ஆப்பிள் திட்டம்..!!

இதே கருவிகள் அமெரிக்காவில் ஐபோன் 6எஸ் ஆரம்ப விலை $649 என்றும் சிங்கப்பூரில் இந்த கருவி $1,048 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய கருவிகள் வெவ்வேறு விலைகளில் ஈபே, ப்ளிப்கார்ட், க்விக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ் போன்ற தளங்களில் விற்பனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Read more about:
English summary
iPhone 6s, iPhone 6s Plus prices are higher in India than overseas. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot