ஐபோன் 6 பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!! என்ன கதை உடுறியா..??
ஐபோன் பேட்டரி ஒரு வாரம் தாங்கும் என்றதும் மிகவும் ஆவலுடன் 'க்ளிக்' செய்தவர்களுக்கு முதல் தகவல் இது தான், இந்த பரபரப்பான அறிவிப்பை 'ஆப்பிள்' நிறுவனம் செய்யவில்லை என்பது தான்.
உடனே ஏமாற வேண்டாம், உண்மையில் 'ஐபோன் 6 பேட்டரி ஒரு வாரம் வரை தாங்கும்' என்கின்றது இந்த ப்ரிட்டன் நிறுவனம். 'இன்டெலிஜன்ட் எனர்ஜி' எனும் ப்ரிட்டன் நிறுவனம் இது குறித்து வழங்கி இருக்கும் கூடுதல் தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

பேக்கப்
ப்ரிட்டன் நாட்டை சேர்ந்த இன்டெலிஜன்ட் எனர்ஜி நிறுவனம் ஐபோன் 6 பேட்டரி ஒரு வாரம் வரை தாங்கும் என தெரிவித்துள்ளது.

ஐபோன் 6
இது வெறும் அறிக்கை கிடையாது என்றும் இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழு
அந்நிறுவனம் தயாரித்திருக்கும் முன் மாதிரியை பொருத்தினால் ஐபோன் 6 கருவியை ஏழு நாட்களுக்கு சார்ஜ் செய்ய தேவையில்லை என்கின்றது.

ஃபூயல் செல்
இன்டெலிஜன்ட் எனர்ஜி நிறுவனம் தான் தயாரித்த இன்டெலிஜன்ட் எனர்ஜி ஃபூயல் செல் ஒன்றை ஐபோன் 6 பேட்டரிக்கு மாற்றாக வைத்தது.

ஃபூயல் செல்
இன்டெலிஜன்ட் ஃபூயல் செல்கள் பொருத்தப்பட்ட ஐபோன் 6 ஒரு வாரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என இன்டெலிஜன்ட் எனர்ஜி நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.

கவலை
இந்த முறை பயன்பாட்டிற்கு வந்தால் உலகெங்கும் இருக்கும் அனைத்து ஐபோன் பயனாளிகளும் பேட்டரி குறித்த கவலை இல்லாமல் இருக்கலாம்.

பேச்சுவார்த்தை
இந்த திட்டத்தை செயல்படுத்த இன்டெலிஜன்ட் எனர்ஜி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்து
இது குறித்து கருத்து தெரிவிக்க இன்டெலிஜன்ட் எனர்ஜி நிறுவனத்தின் நிதி இயக்குனர் மார்க் லாஸன் ஸ்ட்ராடம் மறுத்துவிட்டதாக ப்ளூம்பெர்க் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியீடு
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் ஆப்பிள் நிறுவன கருவிகளில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பேட்டரி பேக்கப் பிரச்சனை தீர்ந்து விடும்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications