ஐபோன் 5S புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

Posted By: Staff
ஐபோன் 5S புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

முதன்முதலில் ஐபோன் 5S புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. தைவானைச் சேர்ந்த ஒரு முக்கிய நிறுவனமானது ஐபோன் 5S புகைப்படங்கள் மற்றும் அதைப்பற்றிய தகவல்கள்கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 

அந்த அறிக்கையின்படி, ஐபோன் 5லிருந்த ரியர் ஷெல் என்ற அமைப்பு முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.
 

மற்றும் போனுக்கு பின்னாலிருந்த "X" என்ற குறியீடும் நீக்கப்பட்டு புதிய ஐபோன் வெளியாவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 

ஐபோன் 5வின் பின்பகுதியை ஈட்ரேட் சப்பளை என்ற நிறுவனம்தான் தயாரித்திருந்தது. இந்த முறையும் சில பகுதிகளை அவர்களே தயாரிக்கிறார்கள் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன், 5S ஆக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் பழைய பதிவுகளின்படி பார்த்தால், ஆப்பிள் தனது போன் மாடல்களுக்கு ஐபோன் 3GS மற்றும் ஐபோன் 4S என்றே பெயர்சூட்டியுள்ளது. எனவே அடுத்தது ஐபோன் 5Sஆக இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
 

ஆப்பிள் நிறுவனம் இதற்கான அறிவிப்பை உலக தொழில்நுட்ப வல்லுனர்கள் மாநாட்டில் (WWDC) வெளியிடுமென எதிர்பார்க்கலாம். இந்த மாநாடு எதிர்வரும் 2013ல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தைவானைச் சேர்ந்த டிஜிடைம்ஸ் என்ற ஊடகமும் இந்த அறிக்கையை உறுதிசெய்துள்ளது.
 

ஆப்பிளின் அடுத்த போனுக்கான பெயர் ஐபோன் 6ஆக இருக்கலாமெனவும் சில வல்லுனர்கள் கூறுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் உறுதிசெய்யும் முன்னர் அனைத்து செய்திகளும் வதந்திகளாகவே கருதப்படும்.
 

சில புகைப்படங்கள் இங்கே:

ஐபோன் 5S புகைப்படங்கள் வெளியாகியுள்ளது


ஐபோன் 5S புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot