முதல் நாளே 2 மில்லியன் ஐபோன் 5 விற்று சாதனை

Posted By: Karthikeyan
முதல் நாளே 2 மில்லியன் ஐபோன் 5 விற்று சாதனை

ஆப்பிள் தனது புதிய சாதனமான ஐபோன் 5வை நேற்று விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த சாதனம் விற்பனைக்கு வந்தவுடன் உலக அளவில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதன் பலனாக நேற்று மட்டும் 2 மில்லியன் ஐபோன் 5 விற்றதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் ஐபோன் 5 விற்பனை பல சாதனைகளை முறியடித்திருப்பதாக ஒரு முக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இது ஆப்பிளின் கடந்த ஆண்டு ஐபோன் 4எஸ் விற்பனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஏனெனில் ஐபோன் 4எஸ் 3 நாள்களில் 4 மில்லியன் அளவிற்கு விற்பனையானது. ஆனால் ஐபோன் 5வின் விற்பனை வரும் 3 நாள்களில் 6 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் இறுதிக்குள் இந்த சாதனத்தின் விற்பனை 10 முதல் 12 மில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 5விற்கு ஒரு வலிமையான தொடக்கம் கிடைத்திருக்கிறது. அதனால் அதன் விற்பனை மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என்று ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர்.

மேலும் இந்த சாதனம் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும்போது மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்