Home
News

நானோ சிம் கார்டுகளைத் தீவிரமாக தாயரித்து வரும் நிறுவனங்கள்

By Super
நானோ சிம் கார்டுகளைத் தீவிரமாக தாயரித்து வரும் நிறுவனங்கள்

கடந்த செப்டம்பர் 21 முதல் உலகின் பல நாடுகளில் ஆப்பிள் தனது 6வது தலைமுறை ஸ்மார்ட்போனான ஐபோன் 5ஐ களமிறக்கிக் கொண்டு வருகிறது. மேலும் இந்த போன் களமிறங்கிய முதல் வாரத்திலேயே 5 மில்லியன் போன்கள் விற்றுத் தீர்ந்தன.

தற்போது வரும் நவம்பர் 2ல் இந்த ஐபோன் 5 இந்திய சந்தையில் களமிறங்க இருக்கிறது. 16ஜிபி ஐபோன் இந்திய சந்தையில் ரூ.45,000க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த ஐபோன் 5ன் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் தனது ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4எஸ் ஆகியவற்றின் விலையை இந்திய சந்தையில் கணிசமாகக் குறைத்திருக்கிறது.

குறிப்பாக ஐபோன் 4ன் விலை தற்போது ரூ.26,500 ஆக குறைந்திருக்கிறது. ஐபோன் 4 எஸ்ஸின் விலை ரூ.38,500 ஆக குறைந்திருக்கிறது. ஐபோன் 5 ஸ்மார்ட் போன் 4 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிளின் புதிய எ6 சிப்செட், 1ஜிபி ரேம், மற்றும் 16, 32, 64 ஜிபி மெமரி, ஐசைட் தொழில் நுட்பத்துடன் கூடிய 8எம்பி பின்பக்கக் கேமரா மற்றும் 1.2எம்பி முகப்புக் கேமராவுடன் வருகிறது.

ஐஒஎஸ் 6 இயங்கு தளத்தில் வரும் இந்த போன், வைபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, 3ஜி மற்றும் யுஎஸ்பி இணைப்பு ஆகியவற்றையும் வழங்குகிறது. இதன் பேட்டரி 8 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்குகிறது.

இந்தியாவில் இந்த ஐபோன் 5ஐ விற்பனை செய்ய ரெடிங்டன் மற்றும் இன்க்ராம் மைக்ரோ போன்ற நிறுவனங்களை ஆப்பிள் நியமித்திருக்கிறது. சிம்கார்டை பொருத்தவரை இந்த ஐபோன் 5ல் நானோ சிம் கார்டுகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தற்போது இந்த நானோ சிம் கார்டுகளை பாரதி ஏர்டெல், வோடாபோன், எம்டிஎன்எல் மும்பை ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பதில் மும்மரமாக இருக்கின்றன. மேலும் இந்த நிறுவனங்களின் பழைய சிம் கார்டுகளை ஒப்படைத்துவிட்டு இந்த புதிய நானோ சிம் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X