Home
News

போட்ட பிளான் வீணா போச்சு! செப். 2025 தான் கடைசி.. இன்னொரு iPhone-ம் காலி.. Apple வைக்கும் 2வது முற்றுப்புள்ளி!

வருகிற செப்டம்பர் 2025 உடன் ஆப்பிள் நிறுவனம் இன்றொரு முற்றுப்புள்ளியை வைக்க உள்ளது. உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்து இருக்கும் அடுத்த மாதம் ஆப்பிள் அதன் ஐபோன் 17 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸின் கீழ் "வழக்கம் போல" 4 மாடல்கள் அறிமுகமாகும்.

அதாவது ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) அறிமுகமாகும். ஆனால் அடுத்த ஆண்டு இதே 4 மாடல்களை நாம் பார்க்காமல் போகலாம்!

செப். 2025 தான் கடைசி.. இன்னொரு iPhone-ம் காலி!

தென் கொரிய நாளிதழான இடிநியூஸ் (ETNews) வழியாக கிடைத்த ஆதாரங்களை நம்பினால், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 மாடலுக்கு பிறகு ஐபோன் 18 மாடலை அறிமுகம் செய்யாது. அதாவது எப்படி ஐபோன் 16இ அறிமுகத்தின் வாயிலாக ஐபோன் எஸ்இ மாடல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோ அதேபோல.. ஐபோன் 18 மாடலும் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இடிநியூஸின்படி, 2026 ஆம் ஆண்டில் ஐபோன் 18 க்கு பதிலாக ஐபோன் 18 ஏர் மாடல் அறிமுகமாகும். அதனுடன் ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அறிமுகமாகும்.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் கீழ் அறிமுகமாகும் கடைசி ஸ்டாண்டர்ட் ஐபோன் மாடல் - ஐபோன் 17 மாடலாகத்தான் இருக்கும். அடுத்த ஆண்டு ஐபோன் 18 வாங்கலாம் என்று நீங்கள் பிளான் போட்டு வைத்து இருந்தால்.. அது இப்போதே காலி!

இதுவொரு பக்கம் இருக்க, இன்னொரு தகவல் - ஆப்பிள் நிறுவனம் ஆனது 2027 மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் மற்றொரு ஹார்ட்வேர் (ஐபோன் அறிமுக) நிகழ்வை நடத்தி, அதில் ஐபோன் 18இ மாடலுடன் சேர்த்து ஐபோன் 18 மாடலை அறிமுகம் செய்யலாம் என்கிறது

ஆக மொத்தம் 2026 - 2027 இரண்டாம் காலாண்டின் இறுதிக்குள், ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 5 - 6 வகையான ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்திருக்கும். மேற்கண்ட 2 தகவல்களுமே "லீக்ஸ்" என்பதால், அவைகளை மேலோட்டமாக எடுத்துக்கொள்வதே நம் அனைவருக்கும் நல்லது.

எது உண்மையாகும் என்பதை அறிய ஐபோன் 17 சீரீஸ் அறிமுகத்தின் போதே நாம் அறிய முடியும். ஏனென்றால் ஐபோன் 17 சீரிஸின் கீழ் ஐபோன் 17 ஏர் மாடல் கூட அறிமுகம் செய்யப்படலாம். இம்முறை (2025) ஐபோன் 17 பிளஸ் (iPhone 17 Plus) அறிமுகம் செய்யப்படாமல், அதற்கு பதிலாக புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air Price) மாடல் அறிமுகம் செய்யப்படலாம். இதன் ஆரம்ப விலை $949 (தோராயமாக ரூ.83,000) ஆக இருக்கலாம்

ஆனால் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 17 மாடலின் விலை (iPhone 17 Price) ஆனது பழைய ஐபோன் 16 மாடலின் வெளியீட்டு விலையுடன் பொருந்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீயின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது ஐபோன் 17 சீரீஸ்-க்கான விலையை சுமார் $50 (தோராயமாக ரூ.4,000) உயர்த்த வாய்ப்புள்ளது.

இந்த கணிப்பு துல்லியமாக இருந்தால், ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro Price) மாடலின் விலை $1,049 (தோராயமாக ரூ.91,000) க்கு தொடங்கலாம், இது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலின் வெளியீட்டு விலையான $999 (தோராயமாக ரூ.87,000) விட அதிகமாகும்.

நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) $1,199 (தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகமானது. இதனுடன் ஒப்பிடும்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max Price) மாடலின் விலை $1,249 (தோராயமாக ரூ.1,09,000) ஆக இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 18 May Launch in 2026 Because of New iPhone 18 Air and Apple First Foldable iPhone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X