என்னயா செஞ்சு வச்சிருக்கீங்க.. iPhone 17-ல் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்.. விலை என்னவா இருக்கும்?
ஆப்பிள் (Apple) நிறுவனம், அதன் ஐபோன் 17 (iPhone 17) வரிசையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை செய்யவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஐபோன் 16 சாதனமே வெளிவராத நிலையில், ஐபோன் 17 பற்றிய தகவல் ரசிகர்கள் மத்தியில் சூறாவளியை உருவாக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 11 (iPhone 11) தொடர் வரிசையில் இருந்து இப்போது சமீபத்தில வெளியான ஐபோன் 15 (iPhone 15) தொடர் சாதனம் வரை ஒரே ஒரே அம்சத்தை எந்தவித மேம்படுத்தலும் இல்லாமல், இத்தனை ஆண்டை கடந்து வந்துவிட்டது. அது என்ன அம்சம் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு தீவிரமான ஆப்பிள் பயனர் (Apple users) என்றாலோ?

அல்லது நீங்கள் ஒரு நீண்ட நாள் ஐபோன் பயனர் என்றாலோ? இந்த மாறாத அம்சத்தை உங்களால் எளிமையாக கெஸ் (Guess) செய்திருக்க முடியும். தெரியாதவர்களுக்கு, ஐபோன் (iPhone) சாதனத்தின் முன்பக்க டிஸ்பிளேவில் (Display) பொருத்தப்பட்டுள்ள செல்பி கேமராவை (Selfie camera) ஆப்பிள் நிறுவனம் பல காலமாக மாற்றாமல் அதே மெகாபிக்சல் (Megapixel) உடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது என்பதே உண்மையாகும்.
ஐபோன் 17 இல் இடம்பெறப்போகும் மிகப் பெரியமாற்றம் (Biggest change coming to iPhone 17):
ஆம், ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 11 தொடர் சீரிஸ் இல் இருந்து அதன் சாதனத்தில் 12MP செல்பி கேமரா (12MP selfie camera sensor) சென்சாரை வழங்கி வருகிறது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, நிறுவனம் ஒருவழியாக இதை மாற்ற முடிவு செய்துள்ளது என்று மிங் சீ குஓ (Ming-Chi Kuo) என்ற நிபுணரால் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் அறிமுகம் ஐபோன் 16 (iPhone 16) அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
ஐபோன் 16 வரிசைக்கு பிறகு வெளிவரவிருக்கும் ஐபோன் 17 (iPhone 17) சாதனத்தில் இந்த செல்பி கேமரா மேம்படுத்தல் மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள லீக் தகவலின் படி, ஐபோன் 17 சீரிஸ் வரிசை சாதனங்களில் ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் 24MP செல்பி கேமரா (24MP selfie sensor) சென்சார்களை பொருத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. சமீபத்தில் வெளியான ஐபோன் 15 சீரிஸ் சாதனங்கள் வரை நிறுவனம் 12MP திறன் கொண்ட 5P லென்ஸ் சிஸ்டத்தை (5P lens system) தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால், ஐபோன் 17 சாதனத்தில் இடம்பெறவுள்ள 24MP கேமரா சென்சார்கள் 6P லென்ஸ் சிஸ்டம் (6P lens system) அடிப்படையில் இயங்கக்கூடியதாக இருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
5P லென்ஸ் சிஸ்டம் மற்றும் 6P லென்ஸ் சிஸ்டம் இரண்டிற்கு இடையில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் அதன் குவாலிட்டி (quality) மற்றும் கிளாரிட்டி (clarity) தான் என்கிறது ஆப்பிள். ஐபோன் 17 வரும் பொழுது ஐபோன் பயனர்களின் கேமரா அனுபவம் இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
ஐபோன் 17 சாதனத்தில் 24MP செல்பி கேமரா (24MP selfie camera on the iPhone 17 device):
அதேபோல், ரசிகர்கள் அனுபவித்திடாத செல்பி கேமரா இமேஜ் கிளாரிட்டியை (Image clarity) அனுபவிக்க முடியும் என்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த 6P லென்ஸ் சிஸ்டத்தை தைவானை அடிப்படையாக கொண்ட Yujingguang என்று நிறுவனம் உருவாக்குகிறது. இது 5P லென்ஸ் சிஸ்டத்தை விட 100 முதல் 120 சதவீதம் விலை உயர்வானது என்று கூறப்படுகிறது. இதனால், ஐபோன் 17 பெரிய விலை (iPhone 17 price) மாற்றத்தை பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஐபோன் 16 சாதனத்தில் ஆப்பிள் நிறுவனம் பின்பக்க கேமராவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக லீக் தகவல் குறிப்பிடுகின்றன. அடுத்து வரும் ஐபோன் மாடல்களில் நாம் ஏராளமான மாற்றங்களை பார்க்க முடியும் என்கிறது டெக் வட்டாரம். அதேபோல், ஐபோன்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








