Apple இதை வெளிய சொல்லாது.. iPhone 17 மாடலை 1000 முறைக்கு மேல் ஃபுல் சார்ஜ் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?
பொதுவாகவே ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மாடல்களின் பேட்டரி கெப்பாசிட்டி குறித்த விவரங்களை வெளியே சொல்லாது. அதாவது எம்ஏஎச் திறன் குறித்து வாயே திறக்காது மாறாக "எவ்வளவு மணிநேரம் பேட்டரி லைஃப் வழங்கும்" என்பதையே விளம்பரப்படுத்தும்.
ஆனால் பேட்டரி சைக்கிள் (Battery Cycle) குறித்த விவரங்களை மறைக்க முடியாது. கஸ்டமர்களிடம் "ஓப்பனாக" சொல்ல முடியாது என்றாலும், இயு எனர்ஜி லேபிளை (EU Energy Label) மறைக்க முடியாது. ஐரோப்பாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களின் மீது இப்போது கட்டாயமாக இருக்கும் லேட்டஸ்ட் இயு எனர்ஜி லேபிள்களானது ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் (How long batteries should last) என்பதற்கான கடுமையான எண்களை உள்ளடக்கியது.

அதாவது - ஒரு முறை சார்ஜ் செய்தால் மட்டுமல்ல, பல வருட பயன்பாட்டிற்கு பிறகும் கூட ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்பதை பற்றியது தான் இந்த இயு எனர்ஜி லேபிள். இந்த இடத்தில் தான் பேட்டரி சைக்கிள் குறித்த விவரங்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆப்பிளுக்கு ஏற்படுகிறது; குறிப்பாக லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஐபோன் 17 சீரீஸின் (iPhone 17 Series) பேட்டரி சைக்கிள் விவரங்கள்!
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, ஸ்டாண்டர்ட் ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களை உள்ளடக்கிய ஐபோன் 17 சீரீஸ்க்கான பேட்டரி சைக்கிள் - அவற்றின் பேட்டரிகள் 80% ஆரோக்கியத்திற்கு கீழே குறையும் வரை 1,000 சார்ஜ் சுழற்சிகளுக்கு மதிப்பிடப்படுகின்றன.
இந்த தரநிலை ஆப்பிள் நிறுவனத்தின் மிக மெல்லிய மாடலான ஐபோன் ஏர் மாடலுக்கும் கூட பொருந்துகிறது. ஒப்பிடுகையில், இந்த எண்கள் ஐபோன் 16 சீரீஸ்-க்கான மதிப்பீட்டை போலவே உள்ளன. ஆக இந்த முறையும் நீண்ட காலத்திற்கு நீடித்துழைப்பதில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைவார்கள்.
இயு எனர்ஜி லேபிள்களில் வழங்கப்பட்ட தகவல்களின்படி மற்றும் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியால் உறுதிப்படுத்தப்பட்டபடி, சாம்சங் தான் நீண்ட கால பேட்டரி சைக்களில் - ராஜாவாக இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் மாடல் ஆன கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் ஆனது, அதன் பேட்டரியின் திறன் 80% க்கும் குறைவாக குறைவதற்கு முன்பு 2,000 முழு சார்ஜ் சுழற்சிகளுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த ஐபோன் 17 சீரிஸும் உறுதியளிப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இது நீண்ட கால மதிப்பை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை / ஒரு ஸ்மார்ட்போன் பிரண்ட்டை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான புள்ளிவிவரமாகும். ஒரு ஸ்மார்ட்போன் ஆனது "உண்மையான" பேட்டரி தேய்மானத்தை காண்பதற்கு முன்பு எத்தனை முறை ரீசார்ஜ் செய்யப்படலாம் என்கிற புள்ளிவிவரம் யாருக்குத்தான் தேவையில்லாத ஒன்றாக இருக்கும்!
இத்தனைக்கும் ஆப்பிள் நிறுவனமானது, புதிய ஐபோன் 17 மாடல் ஆனது பழைய ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும், இது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது என்றும் கூறுகிறது. மேலும் ஆப்பிளின் கூற்றுப்படி ஐபோன் 17 மாடலானது சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும் மற்றும் வெறும் 10 நிமிட சார்ஜ் 8 மணிநேர பயன்பாட்டை வழங்கும்.


Click it and Unblock the Notifications