மூன்று நாட்கள் சேற்றுக்குள் புதைந்த iPhone.. புயலுக்குப் பிறகு காத்திருந்த ஆச்சரியம்.. நடந்தது இதுதான்..
பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களின் தூசி, தண்ணீர், மற்றும் கடுமையான சூழ்நிலைகளையும் தாங்கிக்கொள்ளும் திறனைச் சுட்டிக்காட்டும் IP மதிப்பீடுகள் (IP ratings) குறித்து பெருமையாகப் பேசுகின்றன. ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் போன்களின் திறனை நேரடியாகச் சோதிக்க மாட்டோம். ஆனால் சில சமயங்களில், நிஜ வாழ்க்கை அத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கி விடுகிறது. அப்போது தான் போன்களின் உண்மையான திறனை நம்மால் காண முடிகிறது.
தற்போது அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை Reddit தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். பிலிப்பைன்ஸ்-ஐ சேர்ந்த அவர், தாய்ஃபூன் கல்மெகி (Typhoon Kalmegi ) புயல் தாக்கியது எனவும், அவரது இடத்தில் ஐபோன் மூன்று நாட்கள் சேறு மற்றும் வெள்ளநீரில் மூழ்கி இருந்தும், எந்தப் பிரச்சனையும் இன்றி மீண்டும் செயல்படத் தொடங்கியது என தெரிவித்துள்ளார்.

புயல் அவரது ஊரில் பெரும் அழிவை ஏற்படுத்தியது, அவர்களின் வீட்டை தரைமட்டமாக்கியது மற்றும் அவர்களின் உடைமைகளை அடித்துச் சென்றது எனத் தெரிவித்தார். இந்த புயல் வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக அவர் ஐபோன் 17 ப்ரோ மாடலை தவற விட்டுள்ளார். அந்த சமயத்தில் போனை விட உயிர்பிழைப்பது தான் முக்கியம் என புயலில் இருந்து தப்பித்துள்ளார்.
ஒருவழியாக மூன்று நாட்கள் கழித்து புயல் மற்றும் வெள்ளநீர் குறைந்தபின்பு, அந்த பயனர் தன் பொருட்களைத் தேடத் தொடங்கினார். அதில் அவரது பல பொருட்கள் வெள்ளத்தில் காணாமல்போனது. ஆனால் அவரது ஐபோன் மட்டும் கடினமான சேற்றுக்குள் புதைந்து கிடந்த நிலையில் கண்டுபிடித்தார்.
அதன்பின்பு இந்த போனை சுத்தம் செய்து சார்ஜ் செய்து பார்த்தார். அப்போது ஆச்சரியமாக, பேட்டரி சார்ஜ் ஆகும் நேரத்தில் iPhone உடனே இயங்கத் தொடங்கியது. அதில் எந்த வெளிப்படையான சேதமும் இல்லை, செயல்திறன் குறையவும் இல்லை என அந்த நபர் தெரிவித்தார்.
கடுமையான சூழ்நிலைகளிலும், சேறான வெள்ளநீரில் நீண்ட நேரம் மூழ்கியிருந்தும், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனம் எவ்வளவு உறுதியானது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. வெள்ளநீர் மின்னணு சாதனங்களுக்கு மிகவும் ஆபத்தானது அதில் உள்ள மாசுகள், கழிவுகள் மற்றும் கனிமங்கள் உள்புற கூறுகளை விரைவாகக் கெடுக்கக்கூடும். ஆனால் அந்த ஐபோன் மாடலில் சேதம் எதுவும் ஆகாமல் மீண்டும் செயல்படத் தொடங்கியது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
ஐபோன் 17 ப்ரோ மாடல் ஆனது IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளிவந்தது. குறிப்பாக இது நீர், தூசி மற்றும் தெறிப்புகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு 6.3 இன்ச் (பிக்சல்கள்) ஓஎல்இடி(OLED) டிஸ்பிளே இதில் உள்ளது.
குறிப்பாக இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மாடலாகும்.மொத்தமாக செராமிக் ஷீல்டு 2 (Ceramic Shield 2) புரொடக்சன் கிடைக்கிறது. மேலும் இதில் சிக்ஸ் கோர் ஏ19 ப்ரோ (Six Core A19 Pro) சிப்செட் மற்றும் கனெக்டிவிட்டிக்காக என்1 (N1) சிப் கிடைக்கிறது.
இந்த போனின் பின்புறம் 48 எம்பி ப்யூஷன் மெயின் கேமரா + 48 எம்பி ப்யூஷன் அல்ட்ரா வைடு கேமரா + 48 எம்பி ப்யூஷன் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 18 எம்பி செல்பீ கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல சிறப்பான வசதிகள் இந்த ஐபோன் 17 ப்ரோ மாடலில் உள்ளது.
photo credit: Reddit


Click it and Unblock the Notifications