Home
News

iPhone 17, iPhone 17 Air அறிமுக தேதி அறிவிப்பு.. Apple Awe Dropping நிகழ்வில் மொத்தம் 8 புது அறிமுகம்!

ஐபோன் 17 சீரிஸின் அறிமுகம் செப்டம்பரில் நடக்கும் என்று கண்டிப்பாக தெரியும் ஆனால் சரியான தேதி தான் தெரியவில்லை என்று.. இனி நாம் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹாஹார்ட்வேர் வெளியீட்டு நிகழ்வின் தேதியை அறிவித்துள்ளது.

"ஆவ் ட்ராப்பிங்" (Awe Dropping) என்கிற பெயரின் கீழ் நடக்கவுள்ள இந்த ஆப்பிள் நிகழ்வு 2025 செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், சரியாக செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் தொடங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

iPhone 17, iPhone 17 Air அறிமுக தேதி அறிவிப்பு!

சந்தேகத்திற்கு இடமின்றி இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களாக ஐபோன் 17 சீரீஸ் மாடல்கள் அறிமுகமமாகும். கூடவே பல்வேறு வகையான ஆப்பிள் தயாரிப்புகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக ஆப்பிளின் செப்டம்பர் 9 நிகழ்வில் என்னென்ன அறிமுகமாகும்? இதோ லிஸ்ட்:

1. ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series): கடந்த ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் நான்கு மாடல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்; ஆனால் சில மாற்றங்கள் இருக்கும். இம்முறை ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக புதிய ஐபோன் 17 ஏர் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்

ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது இதுவரை வெளியான எந்தவொரு ஐபோன் மாடலை விடவும் மிக மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸுக்கு இடையில் அமரலாம்.

அதாவது ஆப்பிளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஐபோன் சீரீஸில் பின்வரும் மாடல்கள் இருக்கலாம்:
1. ஐபோன் 17
2. ஐபோன் 17 ப்ரோ
3. ஐபோன் 17 ஏர்
4. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 17 சீரீஸ் உடன் வேறு என்னென்ன ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம்?
5. ஆப்பிள் ஏர்பாட் ப்ரோ தேர்ட் ஜெனரேஷன் (AirPods Pro 3rd Generation)
6. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 (Apple Watch Series 11)
7. ஆப்பிள்வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3)
8. ஐபோன் 17 சீரீஸ்க்கான புதிய டெக்வோவன் கேஸ் (மேக்சேஃப் ஆக்சஸெரீ)

ஐபோன் 17 சீரீஸ் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் ஆன எடிசன் லீயின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது ஐபோன் 17 சீரீஸ்-க்கான விலையை சுமார் $50 (தோராயமாக ரூ.4,000) உயர்த்த வாய்ப்புள்ளது. இந்த கணிப்பு துல்லியமாக இருந்தால், ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro Price) மாடலின் விலை $1,049 (தோராயமாக ரூ.91,000) க்கு தொடங்கலாம்.

இது ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடலின் வெளியீட்டு விலையான $999 (தோராயமாக ரூ.87,000) விட அதிகமாகும். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) $1,199 (தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகமானது. இதனுடன் ஒப்பிடும்போது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max Price) மாடலின் விலை $1,249 (தோராயமாக ரூ.1,09,000) ஆக இருக்கலாம்.

புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air Price) மாடலின் ஆரம்ப விலை $949 (தோராயமாக ரூ.83,000) ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடல் ஆனது $899 (தோராயமாக ரூ.75,500) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக இந்த ஆண்டு விலை உயர்வு இல்லாமல் அறிமுகமாகும் ஒரே ஐபோன் 17 சீரீஸ் மாடல் ஆக ஐபோன் 17 மாடலாகத்தான் இருக்கும்.

இது ஐபோன் 16 மாடலின் அதே வெளியீட்டு விலையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று ஆய்வாளர் லீ கூறுகிறார். அதாவது ஐபோன் 17 மாடல் $799 (தோராயமாக ரூ.67,100) க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை விவரங்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு தொடங்கும் ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 Launch Date September 9 Apple Awe Dropping Event 2025 Timing What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X