Home
News

iPhone 17 சாதனத்தை ஆப்பிள் இந்தியாவில் தயாரிக்க போகிறதா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15) மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இதனை தொடர்நது, அடுத்த புது வரவான ஐபோன் 16 (iPhone 16) பற்றிய தகவல்களும் இப்போதிலிருந்து ஆங்காங்கே லீக் செய்யப்பட்டு வருகின்றன.

ஆப்பிள் ஐபோன் 16 அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கமான பழக்கத்தை வைத்து பார்க்கையில், புதிய ஐபோன் 16 சாதனத்தை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2024 இல் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, திடீரென ஐபோன் 17 (iPhone 17) பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிய துவங்கியுள்ளது.

iPhone 17 சாதனத்தை ஆப்பிள் இந்தியாவில் தயாரிக்க போகிறதா? இதனால் என்ன?

பிரபல பகுப்பாய்வாளர் மிங்-சி குவோ இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விரிவாக்கத் திட்டங்களை பற்றி சமீபத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் அவர், திடீரென ஐபோன் 17 இன் தயாரிப்பு குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குவோவின் கூற்றுப்படி, ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 (iPhone 17) போனுக்கான புதிய தயாரிப்பு அறிமுகம் (NPI), 2025 இன் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, ஐபோன் 17 சாதனத்தின் தயாரிப்பு 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவிற்கு வெளியே ஒரு புதிய ஐபோன் மாடலின் வளர்ச்சியை ஆப்பிள் நிறுவனம் துவங்குவது இதுவே முதல் முறையாகும். முதல் முறையாக சீனாவிற்கு வெளியே ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பை தயாரிக்க இருப்பதினால், ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 மாடல் மட்டும் இந்தியாவில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கான முக்கிய காரணம், ஸ்டாண்டர்ட் ஐபோன் மாடல்களில் குறைந்த சிரமமான வடிவமைப்பு மேம்படுத்தல்கள் மட்டுமே இருக்கும், இது வடிவமைப்பு அபாயத்தைக் குறைப்பதற்காக வழியை கொண்டிருக்கிறது என்பதனால், ஐபோன் 17 மாடலின் ஸ்டாண்டர்ட் பாதிப்புகள் இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபோன் 17 தயாரிப்பு மூலம் இந்தியாவின் ஐபோன் தயாரிப்பு விகீதம் அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சரியாக கூறவேண்டுமென்றால், 2023-ம் ஆண்டில், உலகளாவிய ஐபோன் ஏற்றுமதிகளில் 12% - 14% வரை இந்தியா ஐபோன் தயாரிப்பில் பொறுப்பேற்றுள்ளது. ஐபோன் உற்பத்தி திறனில் 75% - 80% வரை ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் இருந்து விலகிவரும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்கள் சரியாக நடந்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் விகிதம் 2024-ம் ஆண்டிற்குள் 20% -25% வரை அதிகரிக்கக் கூடும் என்று கூறுகிறார்.

இந்தியாவில் ஆப்பிளின் வளர்ச்சிக்கு மாறாக, விரிவாக்கம் 2024 ஆம் ஆண்டளவில் சீனாவின் ஜெங்ஜோ (Zhengzhou) மற்றும் தையுவானில் (Taiyuan) ஃபாக்ஸ்கானின் உற்பத்தி அளவு முறையே 35-45% மற்றும் 75-85% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், டாடாவை ஐபோன் அசெம்பிளராக மாற்றுவதன் மூலம் இந்திய அரசாங்கத்துடனான தனது உறவை வலுப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக மிங்-சி குவோ கூறியிருக்கிறார்.

எது எப்படியாக இருந்தாலும், இந்தியாவில் விஸ்ட்ரானின் (Wistron) ஐபோன் தயாரிப்பு லைன்களை டாடா ஏற்கனவே வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்புகளின் எதிர்கால விற்பனைக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு ஆப்பிள் நிறுவனத்திற்கு வளர்ச்சியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 17 development process to begin in India From 2024 Apple production plan details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X