Home
News

காத்து மேலே.. காத்து கீழே.. அல்ட்ரா தின் மாடலில் புது iPhone 17 Air.. வெயிட்டே இல்லை.. விலை விபரம் லீக்கானது..

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த புதுவரவான ஆப்பிள் ஐபோன் 17 ஏர் (Apple iPhone 17 Air) மாடல் குறித்த தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை ஆப்பிள் வரலாற்றில் வெளிவராத அளவுக்கு மிகவும் ஒல்லியான ஐபோனை (slimmest iPhone ever) நாம் இந்த 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம் என்று Apple வட்டாரம் லீக் (Apple leaks) தகவலை வெளியிட்டு வருகிறது. ஆம், ஐபோன் 17 ஏர் சாதனம் அல்ட்ரா-தின் வெர்ஷன் (iPhone 17 Air Ultra-Thin Version) மாடலாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய iPhone 17 Air பற்றிய கூடுதல் விபரங்கள் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஆப்பிள் ரசிகர்கள் ஆரவாரமாக காத்திருக்கும் அடுத்த ஆப்பிள் ஐபோன் சாதனம் ஐபோன் 17 ஏர் (Apple iPhone 17 Air) என்ற பெயருடன் 2025 செப்டம்பர் (September) மாதம் உலகளவில் அருகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அதன் புதிய ஐபோன் மாடலை (new iPhone model) உலகிற்கு அறிமுகம் செய்வதை ஒரு பழக்கமாகவே பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காத்து மேலே.. காத்து கீழே.. அல்ட்ரா தின் மாடலில் புது iPhone 17 Air..

காத்து மேலே.. காத்து கீழே.. அல்ட்ரா தின் மாடலில் புது iPhone 17 Air:

இந்த 2025 ஆம் ஆண்டில் ஆப்பிள் ரசிகர்களின் கரங்களில் சேர தயராகி வரும் ஐபோன் 17 ஏர் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பு பற்றி முதலில் பார்க்கலாம். இந்த சாதனம் 6mm தடிமன் உடன் 7.8mm அளவுவுடன் மிகவும் மெலிதான மற்றும் வெயிட்டே இல்லாத, காத்து போன்ற ஐபோன் சாதனமாக (slim iPhone device) வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் 17 ஏர் மாடல் முந்தைய மாடலான ஐபோன் 16 மாடலை விட மிகவும் மெலிதாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. இந்த ஐபோன் சாதனம் 6.6" இன்ச் அளவு கொண்ட 120Hz OLED டிஸ்பிளேவை (display) கொண்டிருக்கும். இந்த முறை ஐபோன் 17 சாதனம் ஆப்பிள் டச் அண்ட் டிஸ்ப்ளே டிரைவர் இன்டகிரேஷன் (TDDI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 17 ஏர் (Apple iPhone 17 Air):

இதன் அல்ட்ரா-தின் வடிவமைப்பு காரணமாக மிகவும் மெலிதான டிஸ்பிளேவை ஆப்பிள் பயன்படுத்துவதனால், இதன் பேட்டரி (battery) திறனில் சிறிது சிரமத்தை சந்திக்க நேரிடலாம் என்று லீக் தகவல் கூறுகிறது. இந்த ஐபோன் 17 ஏர் சாதனம் ஆப்பிள் இன் புதிய A19 சிப்செட் (chipset) உடன் இயக்கும் என்று கூறப்படுகிறது. இது அதிவேகமான பெர்பார்மென்ஸ் (performance) மற்றும் எனர்ஜி ஏபிசியன்சியை (energy efficiency) அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த iPhone 17 Air டிவைஸ் 8GB ரேம் (RAM) மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அட்வான்ஸ்டு ஏஐ அம்சத்துடன் (Apple's advanced AI) வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ஆப்பிளின் முதல் சொந்த வைஃபை சிப் (Apple's in-house Wi-Fi chip) உடன் வெளிவரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்துடன் கூடுதலாக, புதிய அட்டகாசமான கேமரா (camera) அம்சங்களையும் பெற போகிறது என்று லீக் தகவல்கள் ஆப்பிள் ரசிகர்களை குஷி அடைய செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 17 ஏர் விலை (Apple iPhone 17 Air Price):

இந்த முறை ஆப்பிள் ஐபோன் 17 ஏர் சாதனத்தில் நாம் 48MP ரியர் கேமராவை (rear camera) எதிர்பார்க்கலாம். முன்பக்கத்தில், இந்த முறை நாம் 24MP செல்பி கேமராவை (selfie camera) எதிர்பார்க்கலாம் என்று லீக் தகவல்கள் தெரிவித்துள்ளன. கூடுதலாக சமீபத்திய லீக் தகவல், ஆப்பிள் ஐபோன் 17 ஏர் சாதனத்தின் விலை (iPhone 17 Air price) பற்றிய கணிப்பையும் வெளியிட்டுள்ளது.

புதிய லீக் தகவலின் படி, ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) சாதனம் உலக சந்தையில் $899 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த சாதனம் ரூ. 89,900 என்ற விலை முதல் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த மாடலின் பிரீமியம் சாதனம் $1199 விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1,03,132 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 Air Price Details Leaked Check The Expected Main Specifications Too
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X