Apple - நாங்க திருந்திட்டோம்.. இந்த புது iPhone 17 மாடலை பாருங்க.. எல்லாமே நீங்க கேட்ட மாதிரி இருக்கும்..
ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16) மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் 4 மாடல்களை அறிமுகம் செய்து, ஆப்பிள் நிறுவனம் அதன் விற்பனையையும் துவங்கியுள்ள நிலையில், இப்போது ஐபோன் வரிசையில் அடுத்து வெளிவரவுள்ள புதிய ஐபோன் மாடலான ஐபோன் 17 ஏர் (iPhone 47 Air) மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐபோன் 16 விற்பனைக்கு நடுவே ஐபோன் 17 ஏர் பற்றிய விபரங்கள் ஆப்பிள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத்துவங்கியுள்ளது.
ஈர்க்கும் அளவிற்கு Apple என்ன செய்தது என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் சொல்கிறோம். ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16) மாடல் பெரியளவில் ஆப்பிள் ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை. பார்ப்பதற்கு ஐபோன் 15 போல இருக்கிறது, ஆனால், சில ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் அப்கிரேடுகளை மட்டுமே இந்த போன் பெற்றுள்ளது என்று பல எதிர்மறை கருதிகளில் அடிவாங்கியது.

Apple - நாங்க திருந்திட்டோம்.. இந்த புது iPhone 17 Air மாடலை பாருங்க:
இதனால், ஐபோன் 16 தொடர் விற்பனை பெரியளவில் பேசும்படியாக அமையவில்லை என்பதே உண்மையாகும். இதனால், ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 தொடரில் (iPhone 17 series) ஆப்பிள் ரசிகர்கள் வியப்படையும் வகையிலான அம்சங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தெரிவிக்கும் விதமாக இப்போது ஐபோன் 17 ஏர் மாடலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஐபோன் 17 ஏர் டிஸ்பிளே (iPhone 47 Air Display):
ஐபோன் 17 ஏர் (iPhone 47 Air) என்ற இந்த மாடல் பெயர் குறிப்பிடுவது போல, இந்த சாதனம் மிகவும் மெலிதான ஐபோன் சாதனமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6.6" இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் இடம்பெறும் என்பதுவும் கூறப்படுகிறது.
ஐபோன் 17 ஏர் கேமரா (iPhone 47 Air Camera):
அடுத்தபடியாக, இந்த புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 47 Air) ஸ்மார்ட்போனில் ஆப்பிள் நிறுவனம் புதிய 48 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை வழங்கும் என்றும், இதில் டெலிபோட்டோ லென்ஸ் உடன் கூடுதல் ஜூம்மிங் ஆதரவு கொண்ட லென்ஸை ஆப்பிள் வழங்குமென்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், 24 மெகாபிக்சல் கேமராவை வழங்குமென்று கூறப்படுகிறது. அதேபோல், இதன் சக்தி ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட கூடுதலாக இருக்குமென்று கூறப்படுகிறது.
ஐபோன் 17 ஏர் சிப்செட் (iPhone 47 Air Chipset):
காரணம், iPhone 17 Air இல் நிறுவனம் பயோனிக் A19 சிப்பை பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இது அதன் முன்னோடியான A18 போன்ற 3nm செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த சிப் செயல்திறன் மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றங்களை ஏற்படுத்தும். A19 சிப் மல்டிடாஸ்கிங் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனில் சிறந்து விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கேமிங்கை அடுத்தநிலைக்கு எடுத்து செல்லுமென்றும் கூறப்பட்டுள்ளது.
iPhone 47 Air எப்போது அறிமுகம்?
முடிவில், iPhone 17 Air என்பது ஆப்பிளின் புதுமை மற்றும் தரத்திற்கான அர்ப்பணிப்புக்கான ஒரு சிறந்த ஐபோன் மாடலாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மெல்லிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே அம்சங்கள், மேம்பட்ட கேமரா அமைப்பு மற்றும் சக்திவாய்ந்த செயலி ஆகியவற்றுடன், iPhone 17 Air மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு வெளியீடாக இருக்குமென்று கூறப்படுகிறது. இந்த போனின் வருகை குறித்த தகவல் சைலெண்டாக வைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16 சாதனத்தில் என்னென்ன அம்சங்களை பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தோம் என்று கூறினார்களோ அந்த அம்சத்தையும், ஐபோன் 16 சாதனத்தை ஆண்ட்ராய்டு உடன் ஒப்பிட்டு கூறப்பட்ட கேளிக்கைக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 ஏர் மூலம் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு லீக் தகவல் என்பதனால், அசல் போன் வெளிவந்தால் தான் உண்மை என்ன என்பது தெளிவாகும்.


Click it and Unblock the Notifications








