ஐடியா இல்லாத பசங்க.. iPhone 16-ஐ கலாய்க்கும் Android பயனர்கள்.. திரும்ப திரும்ப இதையே கொடுத்து ஏமாத்துறீங்க..
ஐபோன் 16 (iPhone 16) மற்றும் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) குறித்து ரசிகர்கள் மிகவும் எதிபார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றின் டிசைன் குறித்த பல வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்போது அதன் கேமரா பற்றிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வெளியான ஐபோன் மாடல்களில் கேமரா மாடியூல் சதுர வடிவில் கேமராக்கள் டயகனலாக (Diagonal) வைக்கப்பட்டிருந்தது. இதனை மாற்றி ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ரோவில் மீண்டும் பழைய ஐபோனில் இருப்பது போலவே வெர்ட்டிகளாக (Vertical) கேமராக்களை ப்ளேஸ்மென்ட் (Placement) செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

iPhone 16: இந்த கேமரா லென்ஸ் அரேஞ்மென்டானது (Arrangement) 2017ஆம் ஆண்டு வெளியான ஐபோன் எக்ஸ்-ஐ (X) நினைவு படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்த செய்திகளை வெளியிடும் மேக்ரூமர்ஸ் (MacRumors) நிறுவனம் வெளியிட்ட மாகப்ஸில் (Mockups) தற்போது தயாரிப்பில் இருக்கும் ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோவில் கேமரா லென்ஸ்கள் வெர்ட்டிகளாக வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மாதிரியில் மாத்திரை வடிவத்தில் மேடு போல உருவாக்கி கேமரா மாடியூல் (Module) வடிவமைக்கப்பட்டு, அதில் இரண்டு லென்ஸ்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு லென்ஸ்களில் ஒன்று வைட் மற்றொன்று அல்ட்ரா வைடாகவும் இருக்கும். ஃப்ளாஷ் லைட்டிற்கான எல்இடி (LED) மாடியூலிற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது. மேக்ரூமர்ஸ் வெளியிட்ட மாகப்களை உறுதிசெய்யும் வகையில் புகழ்பெற்ற டிப்ஸ்டர் மஜின் பு (Majin Bu) தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோ பழைய ஐபோனின் சாயலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது உண்மை என்றாலும் முற்றிலுமாக அதே போல இருக்காது. ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோவின் வடிவமைப்பு ஐபோன் எக்ஸ் மற்றும் ஐபோன் 11 ஆகிய இரண்டின் கலவை போல இருக்கலாம். ஆனால் முற்றிலுமாக அவற்றை ஒத்து இருக்காமல் இதற்கான தனித்துவமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வெர்ட்டிக்கல் கேமரா பம்ப்: ஐபோன் 12 மாடலும் வெர்டிக்கல் கேமரா வடிவமைப்பைக் கொண்டிருந்தது என்றாலும், ஐபோன் எக்ஸ் மற்றும் 12 மாடலுக்குக்கு இடையில் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், ஐபோன் 12 இல் ஃப்ளாஷ் லைட்டும் கேமரா மாடியூலின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோவிலும் ஒன்றன் கீழ் ஒன்றாக கேமரா லென்ஸ்கள் மாடியூலினுள் வைக்கப்பட்டு ஃப்ளாஷ் லைட் வெளியே வைக்கப்பட்டிருக்கும்.

இதன் காரணமாக ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோவின் வடிவமைப்பு ஐபோன் எக்ஸ் போல இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. மேலும், ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பேசியல் வீடியோக்களுக்கான சப்போர்ட் (Spatial Video Support) இந்த ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோவிலும் இடம்பெரும். இந்த அம்சத்திற்காகத் தான் இந்த வெர்டிக்கல் லென்ஸ் அரேன்ஞ்மென்டை (Vertical lens arrangement) ஐபோன் 16 சீரிஸில் கொண்டுவந்திருக்கலாம்.
ஐபோன் 15 ப்ரோவில் இருப்பது போலவே சிறிய ஆக்ஷன் பட்டன் (Action button), ப்ரெஷர் சென்சிட்டிவ் கேப்சர் பட்டன் (Pressure sensitive capture button) ஆகியவற்றுடன் சேர்த்து லேசாக வளைந்த ஓரங்கள், சீரான பெசல் (Bezels) போன்ற ஐபோன்களின் பிரத்தியேக வடிவமைப்புகளும் இந்த ஐபோன் 16 மற்றும் 16 ப்ரோவில் இருக்கும்.


Click it and Unblock the Notifications