Home
News

iPhone 15, iPhone 14, iPhone 13, iPhone 12-க்கு ஆப்பிள் எவ்வளவு தரும்? புது iPhone 16 வாங்க எது பெஸ்ட் ஐபோன்?

ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஐபோன் 16 தொடரை உலகளவில் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை இப்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த புதிய ஐபோன் வரிசையில் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) போன்ற மாடல்களை இப்போது இந்தியாவில் மக்கள் வாங்க முடியும். புதிய ஐபோன் 16 விலையில் ஏறக்குறைய பாதிக்கு பாதி குறைக்க ஆப்பிள் தற்போது வாய்பளித்துள்ளது.

இது முழுக்க முழுக்க ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமானது. காரணம், உங்களிடம் பழைய ஐபோன் இருந்தால், அதிக எக்ஸ்சேஞ் செய்து, புதிய ஐபோன் 16 வரிசைக்கு அப்கிரேட் செய்துகொள்ள, ஆப்பிள் இப்போது அனுமதிக்கிறது. உங்களிடம் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 13 (iPhone 13) அல்லது ஐபோன் 12 (iPhone 12) சாதனங்களின் வரிசையில் ஏதேனும் ஒரு மாடல் இருந்தால் அதை இப்போது எக்ஸ்சேஞ் செய்துகொள்ளலாம்.

iPhone 15, iPhone 14, iPhone 13, iPhone 12-க்கு ஆப்பிள் எவ்வளவு தரும்?

புது iPhone 16 வாங்க எந்த போனை எக்ஸ்சேஞ் செய்தால் பெஸ்ட் ஐபோன் ஆக இருக்கும்?

உங்கள் கையில் இருக்கும் பழைய ஐபோன் மாடலின் வயது மற்றும் பேட்டரி திறனை வைத்து, உங்களுக்கு எக்சேஞ் வேல்யூ நிர்ணயம் செய்யப்படும். உதாரணமாக, உங்களிடம் நல்ல கண்டிஷனில் இயங்கும் ஐபோன் 15 இருக்கிறதென்றால், அதற்கு ஆப்பிள் நிறுவனம் இப்போது ரூ. 37,900 வரை எக்ஸ்சேஞ் சலுகை கட்டணமாக பெற முடியும். இப்படி எந்த ஐபோன் மாடலுக்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

புதிய ஐபோன் 16 சாதனத்தின் 128GB மாடல் தொடக்க விலை இந்தியாவில் ரூ .79,900 ஆக இருக்கிறது. ஐபோன் 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஐபோன் மாடல்களை வைத்துள்ள ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தற்போது எக்ஸ்சேஞ் செய்து, புதிய ஐபோன் 16 வரிசைக்கு அவர்களை அப்கிரேட் செய்துக்கொள்ளலாம். இந்த புதிய எக்ஸ்சேஞ் சலுகை நன்மை ஆன்லைன் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் ஆப்லைன் வழியாகவும் பயன்படுத்த கிடைக்கிறது.

சரி, இப்போது எந்த போனிற்கு ஆப்பிள் நிறுவனம் எவ்வளவு கட்டணம் வழங்குகிறது என்பதை பார்க்கலாம். உங்களிடம் ஐபோன் 15 இருக்கிறதென்றால், உங்களுக்கு ரூ. 37,900 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. ஐபோன் 15 இன் தற்போதைய விற்பனை விலை ரூ .69,900 என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, உங்களிடம் ஐபோன் 14 இருக்கிறதென்றால், உங்களுக்கு ரூ. 32,100 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கும்.

iPhone 15, iPhone 14, iPhone 13, iPhone 12-க்கு ஆப்பிள் எவ்வளவு எக்ஸ்சேஞ் வேல்யூ தரும்?

ஐபோன் 14 சாதனத்தின் தற்போதைய விற்பனை விலை ரூ .59,900 என்பது கவனிக்கத்தகாது. அடுத்தபடியாக, உங்களிடம் ஐபோன் 13 தொடர் இருக்கிறதென்றால், உங்களுக்கு ரூ. 31,000 எக்ஸ்சேஞ் சலுகையாகவும், உங்களிடம் ஐபோன் 12 சாதனம் இருக்கிறதென்றால், ரூ. 20,800 எக்ஸ்சேஞ் சலுகையாகவும் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அருமையான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐபோன் 16 வரிசைக்கு உங்கள் ஐபோன் அனுபவத்தை நீங்கள் அப்கிரேட் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
iPhone 16 Upgrade Offer iPhone 15 iPhone 14 iPhone 13 iPhone 12 Exchange Value Price In Detail Check Before Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X